Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாண்டியன் ஸ்டோரில் இணைந்த சத்ய சாய் கிருஷ்ணா

24 செப், 2020 - 13:12 IST
எழுத்தின் அளவு:
Sathya-Sai-Krishna-joints-in-Pandian-stores

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். கூட்டுக் குடும்ப கலாட்டாக்கள். செண்டிமென்டுகள் நிறைந்திருப்பதால் இந்த சீரியலுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது. இதனால் தெலுங்கு, கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. கொரோனா காலத்திற்கு பிறகு சீரியல் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

இதில் சுஜிதா, ஹேமா ராஜ்குமார், வெங்கட், சித்ரா, குமரன், தங்கராஜன், ஸ்டாலின், விக்ரம் உள்பட பலர் நடிக்கிறார்கள். குடும்ப தொடராக இருந்த போதும் கதிர்-முல்லை காதல் எபிசோட் இளமை துடிப்போடு ஒளிபரப்பாகி வந்தது. தற்போது முல்லை கேரக்டரில் நடித்த ஹேமாவுக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் தொடரில் இருந்து விலகுகிறார். என்றாலும் அவருக்கு பதில் இன்னொரு நடிகையை நடிக்க வைக்காமல் அவர் கேரக்டரை கதைக்குள்ளேயே சைலண்ட் ஆக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

குடும்பத்தின் கடைசி மகனான கண்ணன் கேரக்டருக்கு ஜோடி இல்லை. இதனால் அவருக்கு ஜோடியாக அதாவது கண்ணன் கேரக்டரில் நடித்து வரும் சரவண விக்ரமிற்கு ஜோடியாக சத்யசாய் கிருஷ்ணாவை உள்ளே கொண்டு வருகிறார்கள். கதிர்-முல்லை ஜோடியின் இடத்தை கண்ணன்-சத்யசாய் ஜோடி நிரப்பும் என்று நம்புகிறார்கள். சத்யசாய் கிருஷ்ணா அழகிய தமிழ் மகள், ராஜா மகள் போன்ற சீரியல்களில் நடித்தவர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று!சீரியல் நடிகைக்கு கொரோனா : ... சின்னத்திரைக்கு வருகிறார் இனியா சின்னத்திரைக்கு வருகிறார் இனியா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

LAX - Trichy,இந்தியா
26 செப், 2020 - 00:04 Report Abuse
LAX 'முல்லை கேரக்டரில் நடிப்பது சித்ரா..' 'முல்லை & கதிர் தான் சித்ரா & குமரன்' நீங்க குறிப்பிடும் நடிகை 'மீனா' கேரக்டராக இருக்கும்.. குழப்புறீங்களேப்பா..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in