Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளைஞர்கள் அடாவடி ; போலீஸுக்கு தகவல் கொடுத்த விஷ்ணு விஷால்

24 செப், 2020 - 12:48 IST
எழுத்தின் அளவு:
Youths-Risk-drive-video-:-Vishnu-Vishal-tagged-to-Police

படப்பிடிப்புகள் துவங்க அரசிடம் இருந்து அனுமதி கிடைத்துவிட்ட நிலையில், நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஆந்திராவில் தனது படம் ஒன்றுக்காக முகாமிட்டுள்ளார்.. அந்தவகையில் ஐதராபாத்தில் அவர் காரில் பயணித்தபோது, இரவு நேரத்தில் சாலையில், தனக்கு முன்னே சென்ற ஒரு காரில், இரண்டு இளைஞர்கள் காருக்கு வெளியே ஆளுக்கொரு ஜன்னல் வழியாக பாதி உடல் வெளியே தெரியுமாறு நின்றபடி அடாவடி செய்து கொண்டே பயணித்தனர். இதை தனது மொபைலில் பதிவு செய்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஷ்ணு விஷால், இந்த வீடியோவை ஐதராபாத் போலீஸாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள பதிவில், “இதோ நம் நாட்டின் படித்த இளைஞர்களை பாருங்கள். பொதுவாக இதுபோன்ற வீடியோக்களை நான் பதிவிடுவதில்லை. ஆனால் இந்த இளைஞர்கள் தங்கள் உயிருடன் மட்டுமல்லாது, சாகசங்கள் என்கிற பெயரில் தங்களது செயல்கள் மூலமாக மற்றவர்களுக்கும் தொந்தரவு தருகின்றனர். விழிப்புணர்வுக்காவும் மற்றவர்கள் இதுபோல செய்யக்கூடாது என்பதற்காகவும் தான் இதை பதிவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளதுடன், “இது என்னவென்று கொஞ்சம் பாருங்கள்..” என அதில் ஐதராபாத் போலீஸாரையும் டேக் செய்துள்ளார்..

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
200 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கிய சோனு சூட்200 மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் ... குருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ஓடிடியில் வெளிவருகிறது? குருதி ஆட்டம் பணிகள் நிறைவு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

B.KESAVAN - chennai,இந்தியா
01 அக், 2020 - 00:09 Report Abuse
B.KESAVAN நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு, வாழ்த்துக்கள்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
24 செப், 2020 - 22:56 Report Abuse
LAX நீங்கள்லாமும்பணம் சம்பாதிக்கறதுக்காக சினிமா../நடப்பு ங்கற பேர்ல இந்த மாதிரி சமுதாய சீர்கேடுதானே செய்யறீங்க.. அதையும் யோசிச்சு பாருங்களேன்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in