சினிமாவில் ஒவ்வொரு நாளும் போராட்டமே - ஐஸ்வர்ய லட்சுமி | ரூ.400 கோடி வட்டிக்கு வாங்கி எடுக்கப்பட்ட பாகுபலி : ராணா தகவல் | அடுத்த மாதம் ஜென்டில்மேன் 2 பட இசையை துவங்கும் கீரவாணி | ஆல்கஹால் தேவையில்லை.. டானிக்கே போதும் ; அதா ஷர்மாவின் அதிரடி | ஆந்திர முதல்வர் சுயசரிதையை படமாக்கும் ராம்கோபால் வர்மா | மகேஷ்பாபு படத்தில் மோகன்லாலை இணைக்க முயற்சி செய்யும் ராஜமவுலி | மலையாள பட விழாவில் விஜய் தேவரகொண்டா பட இயக்குனரை விமர்சித்த அல்லு அரவிந்த் | இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது - திரைப்பிரபலங்கள் இரங்கல் | வெற்றிகரமான 'வாரம்' இல்லை, வெற்றிகரமான 'நாட்கள்' மட்டுமே.. | ஆதிபுருஷ் படத்தின் புதிய டிரைலர் அப்டேட் |
கடந்த 2018-ல் மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான ஜோசப் என்கிற படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. மலையாளத்தில் கதையின் நாயகனாக குணச்சித்திர நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடித்திருந்த கதாபாத்திரத்தில் தமிழில் ஆர்கே சுரேஷ் நடித்து வருகிறார். படத்திற்கு தற்போது விசித்திரன் என டைட்டில் வைத்துள்ளார்கள். ஆர்கே சுரேஷின் மனைவியாக பூர்ணா நடித்துள்ளார்.
மலையாளத்தில் இந்தப்படத்தை இயக்கிய பத்மகுமார் தான் தமிழிலும் இயக்கி வருகிறார். இயக்குனர் பாலாவின் 'பி ஸ்டுடியோஸ்' தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, இயக்குனர் ஜான் மகேந்திரன் வசனம் எழுதியுள்ளார். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பே இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இதன் இறுதிக்கட்ட பணிகள் துவங்கியுள்ளது.