Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதன்முதலில் தனக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய ரசிகருடன் போனில் நலம் விசாரித்த ரஜினி

23 செப், 2020 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Another-fan-in-hospital-:-Rajini-ask-about-his-health-via-phone

உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் ரஜினி. ஆனால் இந்த சூப்பர்ஸ்டார் சிம்மாசம் அவ்வளவு எளிதாக அவருக்கு கிடைத்துவிடவில்லை. அதன் பின்னால் ரஜினியின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என பல்வேறு விசயங்கள் உள்ளது.

தற்போது வீதிக்கொரு ரஜினி ரசிகர் மன்றம் இருந்தபோதும், இதற்கான முதல் விதையை கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் போட்டவர் முத்துமணி என்ற ரசிகர் தான். மதுரையில் அவர் தொடங்கிய ரசிகர் மன்றம் தான் ரஜினியின் முதல் ரசிகர் மன்றம். தான் கடந்து வந்த பாதையை எப்போதுமே மறக்காத ரஜினி, அவ்வப்போது முத்துமணியுடன் போனில் பேசுவது வழக்கம்.

தற்பொழுது முத்துமணி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது பற்றி தகவல் அறிந்த ரஜினி, உடனடியாக தொலைபேசி வாயிலாக முத்துமணியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களது உரையாடல் ஆடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் முரளி என்ற ரசிகருடன் சமீபத்தில் ரஜினி போனில் பேசிய ஆடியோ வெளியாகி வைரலானது. அந்தவகையில் தற்போது முத்துமணியுடனும் ரஜினி பேசும் ஆடியோவை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த ஆடியோவில் முத்துமணிக்கு என்ன உடல்நலப் பிரச்சினை என விசாரிக்கும் ரஜினி, 'விரைவில் குணமாகிவிடும் கவலைப்பட வேண்டாம்' என ஆறுதல் கூறியிருக்கிறார்.



Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சக்ரா படத்திற்கு தடை கேட்டு வழக்குசக்ரா படத்திற்கு தடை கேட்டு வழக்கு மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி மாஸ்டர் தியேட்டரில் தான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

bigu -  ( Posted via: Dinamalar Android App )
23 செப், 2020 - 17:54 Report Abuse
bigu போனில் தொடர்பு கொணடால் போதாது ,அவருக்கு தேவையான பண உதவிகளை செய்யுங்கள்
Rate this:
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னைநீயும் கொஞ்சம் அனுப்பி வைக்கவும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in