ரோஜா சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம் | மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் சசிகுமார் | நான் உங்கள் ரசிகன் : வில்லன் நடிகரை குஷிப்படுத்திய விஜய் | ‛தாமி' படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தமிழ் கதாநாயகி சுவிதா | வெப்சீரிஸ் இயக்கும் அருண்ராஜா காமராஜ் | வித்யாபாலனை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய இயக்குனர் பிரதீப் சர்க்கார் காலமானார் | இரண்டிரண்டு நாயகர்ளுடன் பத்து தல Vs விடுதலை | திருமணத்திற்குப் பிறகு கிளாமர் நடனத்தில் சாயிஷா | படப்பிடிப்பில் அக்ஷய் குமாருக்கு விபத்து : அதிர்ச்சியில் ரசிகர்கள் | நல்ல படங்கள் இல்லை, தடுமாறும் தியேட்டர்கள், பல காட்சிகள் ரத்து |
விஷால் தயாரித்து நடிக்கும் படம் சக்ரா. இதில் அவருடன் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.ஆனந்தன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். படத்தை தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியிட பேசி வருகிறார் விஷால்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் படத்திற்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: நடிகர் விஷால் நடிப்பில் 'புரடக்ஷன் நம்பர் 5' என்ற பெயரில் படத்தை தயாரிக்க திட்டமிட்டேன். இந்த படத்தில் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், படத்தின் கதாநாயகி வில்லியாகவும் நடிக்க கதை உருவாக்கப்பட்டது.
படத்தை இயக்குவதற்காக எம்.ஆனந்தன் என்ற இயக்குநருடன் கடந்த 2018 ஆகஸ்ட 29ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது. படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு வந்ததால் படப்பிடிப்பு முற்றிலும் நின்றுவிட்டது. இந்த நிலையில், நடிகர் விஷால் நடிப்பில் சக்ரா என்ற பெயரில் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் டிரைலர் கடந்த ஜூன் 27ல் வெளியிடப்பட்டது. இந்த படத்திலும் விஷால் ராணுவ அதிகாரி வேடத்திலும், கதாநாயகி வில்லி வேடத்திலும் நடித்துள்ளனர்.
இதே கதையுடன் படத்தை தயாரிக்க போடப்பட்ட ஒப்பந்தம் இதுவரை காலாவதியாகாத நிலையில் ஒப்பந்தத்திற்கு முரணாக ஆனந்தன் சக்ரா படத்தை இயக்கியுள்ளார். எனவே, ஒப்பந்தத்திற்கு மாறாக விஷால் நடிப்பில் சக்ரா படத்தை இயக்கவும், வெளியிடவும் தடை விதிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் அளிக்க நடிகர், தயாரிப்பாளர் விஷால் மற்றும் இயக்குனர் ஆனந்தன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.