Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டிஜிட்டல் தளங்களில் ஒரே நாளில் 2 படங்கள் ரீலீஸ்

23 செப், 2020 - 09:59 IST
எழுத்தின் அளவு:
2-movies-releasing-on-Oct-2

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று இதுவரையிலும் எந்தவிதமான யூகமான தகவலும் வெளிவரவில்லை. அக்டோபர் மாதத்தில் திறப்பார்களா என தியேட்டர்காரர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த ஆறு மாதங்களில் ஓடிடி தளங்களில் புதிய படங்களை நேரடியாக வெளியிட ஆரம்பித்தார்கள். “ஆர்கே நகர், பொன்மகள் வந்தாள், யாதுமாகி நின்றாய், பெண்குயின், காக்டெய்ல், டேனி, லாக்கப், ஒன்பது குழி சம்பத்” ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் இதுவரையில் வெளியாகி உள்ளன.

அக்டோபர் 2ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி நடித்துள்ள 'சைலன்ஸ்' படமும், ஜீ பிளக்ஸ் டிஜிட்டல் தளத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் 'க.பெ.ணரணசிங்கம்' படமும் வெளியாக உள்ளன. ஒரே நாளில் இரண்டு படங்கள் தியேட்டர்கள் அல்லாத முறையில் வெளியாவது இதுவே முதல் முறை.

இதில் வித்தியாசமாக 'க.பெ.ரணசிங்கம்' படம் ஓடிடி முறையில் அல்லாமல், 'Pay Per View'. அதாவது ஒரு முறை பார்க்கக் கட்டண முறையில் வெளியாக உள்ளது. இதற்காக ரூ.199ஐ கட்டணமாக வைத்திருக்கிறார்கள்.

ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் இப்படி தியேட்டர் வெளியீடு இல்லாமல் வெளியாவது தியேட்டர்காரர்களிடையே கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸில் பங்கேற்கவில்லை: நாசர் மகன் விளக்கம்பிக்பாஸில் பங்கேற்கவில்லை: நாசர் ... சக்ரா படத்திற்கு தடை கேட்டு வழக்கு சக்ரா படத்திற்கு தடை கேட்டு வழக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in