பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் |
இத்தனை வருடங்களில் மலையாள சினிமாவில் உள்ள அனைத்து பிரபல ஹீரோக்களுடனும் இணைந்து நடித்துவிட்ட மஞ்சு வாரியர், மம்முட்டி படத்தில் மட்டும் இதுநாள் வரை நடித்ததே இல்லை.. இதற்கு பலவிதமான காரணங்கள் சொலப்பட்டு வந்தாலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அறிமுக இயக்குனர் ஜோபின் டி சாக்கோ என்பவர் இயக்கும் 'தி பிரைஸ்ட்' என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் மஞ்சு வாரியர்.
திரில்லர் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு ஆரம்பிப்பதற்கு முன்பே முக்கால்வாசி நிறைவடைந்து விட்டது. சொல்லப்போனால் மம்முட்டி தனது போர்ஷனை முழுவதுமாக நடித்து முடித்து கொடுத்து விட்டாராம். ஆனால் மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க பத்து நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டியுள்ளதாம். அதனால் கேரளாவில் வாகமன் பகுதியில் படக்குழுவினர் முகாமிட்டு மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்