Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைன் வகுப்பிலிருந்து மகன்கள் நீக்கம் - மனித உரிமை ஆணயத்திடம் முறையிட்ட மதுமிதா

22 செப், 2020 - 19:59 IST
எழுத்தின் அளவு:
மகன்கள்-நீக்கம்---மனித-உரிமை-ஆணயத்திடம்-முறையிட்ட-மதுமிதா

பிரபல தெலுங்கு நடிகையான மதுமிதா, பார்த்திபனின் குடைக்குள் மழை படத்தின் மூலமாக தமிழுக்கு வந்தார். அதன் பிறகு அமீர் நடிகராக அறிமுகமான யோகி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதுதவிர இங்கிலீஸ்காரன், அறை எண் 305ல் கடவுள் உள்பட பல படங்களில் நடித்தார். சில படங்களில் உடன் நடித்த நடிகர் சிவபாலாஜியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் மதுமிதா, ஐதராபாத்தில் கணவருடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு தன்வந்த், கத்ஜல் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். தற்போது கொரோனா காலம் என்பதால் மகன்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளி நிர்வாகம் கல்வி கட்டணத்தை உயர்த்தியது. இதனால் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று 240 பெற்றோர்கள் கையெழுத்திட்டு பள்ளி நிர்வாகத்திடம் மனு கொடுத்தனர். இதுகுறித்து மதுமிதா பள்ளி நிர்வாகத்திற்கு மெயிலும் அனுப்பினார். மாணவர்களின் பெற்றோரை பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக மதுமிதா தூண்டிவிடுவதாக கருதிய பள்ளி நிர்வாகம், மதுமிதாவின் மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் நிர்வாகம் பதில் அளிக்காதால் மதுமிதாவும், அவரது கணவர் சிவபாலாஜியும் தெலுங்கானா மாநில மனித உரிமை ஆணயத்திடம் புகார் அளித்தனர். இதனை விசாரித்த ஆணையம் உடனடியாக மதுமிதாவின் மகன்களை பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் தேவரகொண்டா படம் : ஆண்ட்ரியாவை ஏமாற்றிய நபர்விஜய் தேவரகொண்டா படம் : ஆண்ட்ரியாவை ... ஹோட்டலில் தலையணை உறையைத் திருடிய ராஷ்மிகா! ஹோட்டலில் தலையணை உறையைத் திருடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Muruga Vel - Mumbai,இந்தியா
26 செப், 2020 - 10:13 Report Abuse
 Muruga Vel எல்லா பள்ளிகளும் அளவுக்கு அதிகமா பணம் வசூலிக்கிறார்கள் என்பது தவறு ..பன்வாரிலால் புரோஹித் குடும்பம் நடத்தும் பள்ளிகளில் தரமான ஆசிரியர்கள் நியாயமான கட்டணம் ..நூற்றுக்கு நூறு சதவிகித தேர்ச்சி ..விளையாட்டுகளிலும் மாணவர்கள் முதலிடம் ..
Rate this:
Santhakumar Arumugam - Bangalore,இந்தியா
24 செப், 2020 - 13:28 Report Abuse
Santhakumar Arumugam இது இந்தியாவுல இருக்குற அத்தனை தனியார் பள்ளிகள் கதை இது தான், இதுக்கு எந்த அரசும் நடவடிக்கை எடுக்காது ஏன் என்றால் அரசியல்வாதிகள் தான் அந்த ஸ்கூல் உரிமையாளர்கள். இதுல டெல்லி மட்டும் விலக்கு அங்கு எ எ பி அரசு நடக்குது
Rate this:
NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
23 செப், 2020 - 02:48 Report Abuse
NicoleThomson பள்ளியின் பெயரை எதுக்கு குறிப்பிடாம இருக்கிறீங்க?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in