Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் தேவரகொண்டா படம் : ஆண்ட்ரியாவை ஏமாற்றிய நபர்

22 செப், 2020 - 16:49 IST
எழுத்தின் அளவு:
Andrea-about-fake-producer

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் என் பெயரைச் சொல்லி, என்னோடு நடிக்க வைப்பதாக கூறி சில மோசடி தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறது. அவைகளிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியிருந்தார். அப்படி ஒரு போலி நிறுவனம், நடிகை ஆண்ட்ரியாவை ஏமாற்ற முயற்சித்துள்ளது.

இதுகுறித்து ஆண்ட்ரியா ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: தயாரிப்பாளர் என்று சொல்லிக் கொண்டு ஒருவர் என்னை சந்தித்தார். தான் தயாரிப்பு நிறுவனம் நடத்துவதாகவும், அந்த நிறுவனத்தின் மூலம் வெப் சீரிஸ் தயாரிக்க இருப்பதாகவும், அதில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கு நான் முதலில் கதை கேட்க வேண்டும் என்றேன். இயக்குனரை கதை சொல்ல அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வரவே இல்லை. விசாரித்து பார்த்ததில் அப்படி ஒரு தயாரிப்பாளரோ, நிறுவனமோ இல்லை என்பது தெரிந்தது.

பெண்கள் என்றாலே அப்பாவிகள், ஏமாளிகள் என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்களை எப்படியும் ஏமாற்றி விடலாம் என அலைகிறார்கள். இதுபோன்ற மோசடி பேர்வழிகளிடம் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். இந்த மோசடி கும்பல் மேலும் சில நடிகைகளை ஏமாற்ற முயற்சித்துள்ளது. ஆனால் இதுவரை யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'க.பெ.ரணசிங்கம்' படத்தைப் பார்க்க இவ்வளவு கட்டணமா?'க.பெ.ரணசிங்கம்' படத்தைப் பார்க்க ... ஆன்லைன் வகுப்பிலிருந்து மகன்கள் நீக்கம் - மனித உரிமை ஆணயத்திடம் முறையிட்ட மதுமிதா ஆன்லைன் வகுப்பிலிருந்து மகன்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in