Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'க.பெ.ரணசிங்கம்' படத்தைப் பார்க்க இவ்வளவு கட்டணமா?

22 செப், 2020 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Rs.199-cost-fixed-to-watch-Ka-pae-ranasingam-as-a-single-time

விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'க.பெ.ரணசிங்கம்'. இப்படம் அக்டோபர் 2ம் தேதி 'ஜீ பிளக்ஸ்'-ல் வெளியாக உள்ளது.

'ஜீ பிளக்ஸ்' என்பது கட்டண முறையில் படத்தைப் பார்ப்பதற்காக ஜீ குழுமத்தால் உருவாக்கப்பட்டுள்ள தனி நிறுவனம். இதற்கும் ஓடிடி தளங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஓடிடி தளங்களில் ஒரு வருடத்திற்கு சந்தா கட்டிவிட்டால் அதில் வெளியாகும் நேரடி புதிய படங்களைக் கூட இலவசமாகப் பார்க்கலாம்.

ஆனால், இந்த 'ஜீ பிளக்ஸ்'-ல் ஒரு படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும். அந்த விதத்தில் 'க.பெ.ரணசிங்கம்' படத்தை ஒரு முறை பார்ப்பதற்கு 199 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளார்கள்.

இது சினிமா தியேட்டர்களில் பார்க்கும் அதிகபட்ச கட்டணத்தைவிட அதிகம். சில தியேட்டர்களில் மட்டும் 190 ரூபாய் கட்டணம் இருக்கிறது. ஆனால், அதைவிட 9 ரூபாயை கூடுதலாக வாங்குகிறார்கள்.

'ஜீ பிளக்ஸ்' என்பது டிடிஎச் தளங்களிலும் தெரியும். டிஷ் டிவி, ஏர்டெல், டாடா ஸ்கை ஆகிய தளங்களில் கூட 'ஜீ பிளக்ஸ்' தெரியும் விதத்தில் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.

ஹிந்திப் படமான 'காலி பீலி' படத்திற்கு 299 ரூபாயைக் கட்டணமாக நிர்ணயித்துள்ளார்கள். தியேட்டர்களில் கட்டணம் அதிகம் என்று கூறி வந்தவர்கள், இப்போது இந்த அதிக கட்டணத்தைப் பற்றி என்ன சொல்லப் போகிறார்கள் என தியேட்டர்கார்கள் கேள்வி கேட்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு வரும் ஆலியா பட்'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்புக்கு ... விஜய் தேவரகொண்டா படம் : ஆண்ட்ரியாவை ஏமாற்றிய நபர் விஜய் தேவரகொண்டா படம் : ஆண்ட்ரியாவை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Krish - Salem,இந்தியா
25 செப், 2020 - 11:12 Report Abuse
Krish ஒரு கட்டணத்தில் ஒரு குடும்பம் பார்க்கலாம் (Only 199)...
Rate this:
23 செப், 2020 - 16:28 Report Abuse
அட்மின் அவன் பக்கா திருடன்னா இவன் பலே திருடனா இருக்கான் ....தமிழ்ராக்கர்ஸ் இருக்கு போடா .....
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
23 செப், 2020 - 14:05 Report Abuse
Vaduvooraan சினிமா பார்க்க 200 ரூபா ஒரு பெரிய மேட்டரே இல்ல. தமிழர்கள் நாங்க... சினிமா.... சோறு கூட இல்ல....சுவாசம் மாதிரி எங்களுக்கு
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
23 செப், 2020 - 11:52 Report Abuse
Yaro Oruvan ஹா ஹா.. " ஹிந்தி தெரியாது போடா - ரணசிங்கம் வேண்டாம் போ "... இது எப்டி இருக்கு
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )சூப்பரப்பு...
Rate this:
P Karthikeyan - Chennai,இந்தியா
23 செப், 2020 - 09:12 Report Abuse
P Karthikeyan ஹிந்தி தெரியாது போடா ஆனா எங்களுக்கு காசு மட்டும் வேண்டும் வாடா..இப்படிக்கு ரணசிங்கம் கதாநாயகி .
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in