18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடிக்கும் படம் 'சைலன்ஸ்'. தமிழ், மலையாளத்தில் 'சைலன்ஸ்' என்ற பெயரிலும் தெலுங்கில் 'நிசப்தம்' என்ற பெயரிலும் இப்படம் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக உள்ளது.
நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிளில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. 24 மணி நேரத்திற்குள்ளாக தெலுங்கில் 6 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. ஆனால், தமிழில் அதில் பாதியாக 3 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது. மலையாளத்தில் அதைவிட மோசமாக தெலுங்கு டிரைலரின் பார்வையில் ஆறில் ஒரு பங்கு அதாவது 60 ஆயிரம் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படமாக்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், தெலுங்கில் இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு தமிழ், மலையாளத்தை விட அதிகமாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு அனுஷ்கா நடித்து வெளிவந்த 'பாகமதி' படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. எனவேதான் தெலுங்கில் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.