கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
வந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அங்காடித்தெரு. இதில் நடிகை சிந்து நடித்து பிரபலமானதால் அங்காடித்தெரு சிந்துவாக மாறினார். தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்தார். கொரோனா காலத்தில் கூட தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு மார்பக புற்றுநோய் தாக்கி உள்ளது. தன்னிடம் இருந்த பணம் மற்றும் திரைப்பிரபலங்கள் சிலர் செய்த உதவியால் ஆபரேஷன் செய்துவிட்டார். இருப்பினும் இந்நோயின் தாக்கம் ஸ்பைனல் வரை பரவி இருக்கிறது. இதனால் இப்போது படுக்கையில் இருக்கும் சூழல். இதுப்பற்றி தகவல் அறிந்த நடிகர் பிளாக் பாண்டி அவரை நேரில் சந்தித்ததோடு, அவருக்கு உதவும்படி வீடியோ வெளியிட்டார்.
அந்த வீடியோவில் நடிகை சிந்துவும் தனது நிலை குறித்து விவரித்தார். மேலும் தொடர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் முடிந்தவர்கள் உதவுங்கள், நான் நல்லபடியாக மீண்டு வந்ததும் நிச்சயம் என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வேன் என தெரிவித்துள்ளார்.