மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வழக்கில், நடிகர் திலீப், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி சிறை சென்றார். பின்னர் ஜாமீனில் வெளிவந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட நடிகையின் நெருங்கிய நட்பில் இருந்த நடிகை பாமா, சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் விசாரணையில் திடீரென இந்த வழக்கில் திலீப்புக்கு ஆதரவு தரும் விதமாக பல்டி அடித்துள்ளார் பாமா.
திலீப்புக்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் குரல்கொடுத்து மலையாள சினிமா நடிகர் சங்கத்தை விட்டே வெளியேறிய ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளை பாமாவின் செயல் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுகுறித்து ரம்யா நம்பீசன் கூறும்போது, “சாட்சிகள் திடீரென மாறுவதை பார்த்திருக்கிறேன்.. ஆனால் தோழியாக இருந்தவர் துரோகியாக மாறுவதை இப்போதுதான் முதன்முதலாக பார்க்கிறேன்.. ஆனாலும் இந்த நெடும் போராட்டத்தில் நீதி எங்கள் பக்கம் தான் என நம்புகிறோம்” என கூறியுள்ளார்.
தமிழில், 'எல்லாம் அவன் செயல்', 'சேவற்கொடி' உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் தான் இந்த பாமா. இவர் தவிர, நடிகர் சித்திக், நடிகை பிந்து பணிக்கர் மற்றும் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள இடைவேள பாலு ஆகியோரும் திலீப்புக்கு ஆதரவான பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளனர்.