ரஜினியை கண்டிப்பாக இயக்குவேன் : தேசிங்கு பெரியசாமி வெளியிட்ட தகவல் | மலையாள லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு | ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில் | சிறந்த அறிமுக ஹீரோவுக்கான விருது பெற்ற சதீஷ் | கவர்னருடன் சந்திப்பு ; மீண்டும் அரசியல் வரும் திட்டமா - ரஜினி பதில் | பாலிவுட் படங்களை புறக்கணிக்கும் கிரித்தி ஷெட்டி | மராட்டிய மொழி படத்தில் ஷான்வி | சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி | 200 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்தேன்: அமெரிக்க நடிகை அதிர்ச்சி தகவல் | கணவன் வீட்டில் அனுபவித்த கொடுமைகள்: மனம் திறந்தார் மகேஸ்வரி |
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன், சுந்தர புருஷன் படத்தின் மூலம் கதை நாயகன் ஆனார். அதன் பிறகு பல படங்களில் கதையின் நாயகனாக நடித்தவர், தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்.
லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா சினிமாவில் நடிக்க விரும்பி கலாசல் என்ற படத்தில் அறிமுகமானார். இதில் அவரது ஜோடியாக அம்பிகாவின் மகன் ராம்கேசவ் நடித்தார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். சுந்தர்.சியின் உதவியாளர் அஸ்வின் மாதவன் இயக்கி உள்ளார்.
கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என்றாலும் கொரோனா உள்ளிட்ட பல பிரச்சினைகளால் படம் இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா, சின்னத்திரைக்கு வந்திருக்கிறார். முன்னணி சேனலில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.
"சின்னத்திரையில் ஜெயித்த பிறகும் சினிமாவில் ஜெயிக்க முடியும். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் பல நடிகைகள் ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்தவர்கள்தான்" என்கிறார் ஜோவிதா.