Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீதிமன்றத்தின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன்: சூர்யா

19 செப், 2020 - 12:39 IST
எழுத்தின் அளவு:
I-accepts-Court-advice-says-Suirya

கடந்த வாரம் நடிகர் நீட் தேர்வு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார் சூர்யா. அதில் உயிருக்கு பயந்து நீதிமன்றங்கள் வீடியோ கான்பரன்சில் தீர்ப்பு வழங்கும்போது மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத சொல்வது என்ன நியாயம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை நிராகாரித்த தலைமை நீதிபதி, "பொது வெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். நீதிமன்றத்தையோ, நீதிபதிகளையோ அவமதிக்கும் விதத்தில் கருத்து சொல்லக்கூடாது" என்று சூர்யாவுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த நிலையில் இந்த அறிவுரையை தான் ஏற்றுக் கொள்வதாக சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: இந்திய நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். நான் எப்போதும் நம்முடைய நீதித்துறையை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறேன். இது நம்முடைய மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கை. நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்ரிதா ஐயர், கருண் ராமன்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ... நடுத்தர மக்களின் உண்மை தன்மையை சித்தரிக்க தெரியாதா?: இயக்குனர்களுக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேள்வி நடுத்தர மக்களின் உண்மை தன்மையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
24 செப், 2020 - 08:57 Report Abuse
Parthasarathy Badrinarayanan சூர்யா மாதிரி நான் சாதாரண குடிமகன் பேசினால் நீதி மன்றம் பேசாமலிருக்குமா. தவறான வழிகாட்டுதலுக்கு வித்திட்டுள்ளது/ இனி யார் வேண்டுமானாலும் பேசலாம். நீதிமன்றம் அறிவுரை கூறுவதோடு சரி
Rate this:
karutthu - nainital,இந்தியா
20 செப், 2020 - 20:07 Report Abuse
karutthu இப்படி குறை சொல்லுவதை விட்டுவிட்டு உங்க சூர்யா பௌண்டஷன் மூலமாக அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இலவசமாக நீட் தேர்வு பயிற்சி வழங்கி அவர்களை நீட் தேர்வில் பாஸ் பண்ண வைக்கலாமே சூர்யா
Rate this:
LAX - Trichy,இந்தியா
20 செப், 2020 - 14:24 Report Abuse
LAX 'ஏற்றுக்கொள்கிறேன்' - ஓ.. நீ ஏத்துக்க மாட்டேன்' னு வேற சொல்லுவியா..? எங்க சொல்லிதான் பாரேன்..
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
20 செப், 2020 - 11:48 Report Abuse
srinivasan Suriya vamsam. neethimanrathukku appaarpattathu
Rate this:
srinivasan - stockholm,சுவீடன்
20 செப், 2020 - 11:47 Report Abuse
srinivasan Eppudi iruntha Surya Ippidi aayittaru
Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in