Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்ரிதா ஐயர், கருண் ராமன்

19 செப், 2020 - 10:13 IST
எழுத்தின் அளவு:
Biggboss-Tamil-4-:-Amritha-aier,-Karun-raman-denied

பாடகர் விஜய் ஜேசுதாஸ் நாயகனாக அறிமுகமான படை வீரன் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் அம்ரிதா ஐயர். அதைத்தொடர்ந்து, தெறி படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார். கடந்தாண்டு ரிலீசான பிகில் படம் மக்கள் மத்தியில் அம்ரிதாவை பிரபலமாக்கியது.

தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக அம்ரிதா நடித்துள்ளார். மேலும் பல புதிய படவாய்ப்புகளைப் பெற்று வரும் அம்ரிதா, தமிழ் பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக ஒரு தகவல் வைரலானது.

ஏற்கனவே அது உண்மையில்லை என அம்ரிதா விளக்கம் கொடுத்த போதும், போட்டியாளர்கள் பற்றிய யூக பட்டியலில் இருந்து அவரது நீங்குவதாகத் தெரியவில்லை. அம்ரிதாவிற்கு ஆர்மி துவங்கும் அளவிற்கு அவருடைய ரசிகர்கள் சென்று விட்டனர்.

இதனால் மீண்டும் தான் பிக் பாஸ் வீட்டிற்குச் செல்லவில்லை என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அம்ரிதா. இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அம்ரிதாவைப் போலவே, பிரபலங்களின் செலிபிரிட்டி ஸ்டைலிஸ்ட்டும், பேஷன் கோரியோகிராபருமான கருண் ராமனும் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
களமிறங்கும் வாரிசு!களமிறங்கும் வாரிசு! நீதிமன்றத்தின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்கிறேன்: சூர்யா நீதிமன்றத்தின் அறிவுரைகளை ஏற்றுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in