இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார் | விஜய் மில்டன் படத்தில் ஷாம் | ‛விஜய் 67' பட தலைப்பு லோடிங் : நாளை வருகிறது அறிவிப்பு | இசை படைப்புகளுக்கு சேவை வரியை எதிர்த்த ஏ.ஆர்.ரஹ்மான், ஜிவி பிரகாஷின் மனுக்கள் தள்ளுபடி | 90 சதவீதம் குணமடைந்துவிட்டேன் : விஜய் ஆண்டனி | விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகரின் மகள் | விஜய் படத்திற்காக இளம் நடிகரை சிபாரிசு செய்தாரா மாளவிகா மோகனன் ? | நயன்தாராவின் அடுத்த இரண்டு புதிய படங்கள் | ‛பையா 2' உருவாகிறது : ஆர்யாவுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்? | சூர்யா 42வது படத்தில் சீதா ராமம் நாயகி நடிக்கிறாரா? |
கொரோனா தாக்கம், அதை தொடர்ந்த ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட பலதரப்பு மக்களுக்கு மிகப்பெரிய அளவிலான உதவிகளை செய்து வருகிறார் பாலிவுட் வில்லன் நடிகரான சோனு சூட். குறிப்பாக ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை தனது சொந்த செலவில் பஸ், ரயில், விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் மகள்களை ஏர்பூட்டி உழுத விவசாய குடும்பம் ஒன்றுக்கு, ஒரு புதிய டிராக்டரையே அனுப்பி வைத்தார். இப்படி நீண்டுகொண்டே செல்கின்றது அவரது உதவிகள்.
இந்தநிலையில் தினேஷ் மணிகண்டா என்கிற 20 வயது இளைஞர் ஒருவர், விபத்து ஒன்றில் தனது இடதுகாலை இழந்துவிட்டதாகவும் செயற்கை கால் பொருத்துவதற்கு மருத்துவர்கள் 7 லட்சம் செலவாகும் என்று கூறுவதாகவும் தனது பெற்றோர் டெய்லர்களாக பணிபுரியும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் கூறி தனக்கு உதவி செய்யுமாறு டுவிட்டர் மூலமாக சோனு சூட்டுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதை கவனித்த சோனு சூட், “கவலைப்படதே இந்த வாரத்தில் உனக்கு புதிய கால் கிடைத்துவிடும்.. உன் பெற்றோரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தி விடு” என அந்த இளைஞருக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.