மிஸ் இந்தியா 2022 போட்டியிலிருந்து விலகிய ஷிவானி ராஜசேகர் | திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராம் பொத்தினேனி | அடுத்தடுத்து வெளிவர உள்ள பெரிய படங்கள் | தலைநகரம் 2 படப்பிடிப்பு நிறைவு | ஹரிஷ் கல்யாணின் டீசல் | பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் மருத்துவமனையில் அனுமதி | சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கும் அர்ச்சனா | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் ஜூலி | இது சூப்பர் ஜோடி : திரவியும் - ஸ்வாதி ஜோடிக்கு ரசிகர்கள் கமெண்ட் | சிம்பு படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலாவின் இயக்கத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் அவன் இவன். இப்படத்தில் ஆர்யாவும், விஷாலும் சகோதரர்களாக நடித்திருந்தனர். வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இப்படத்திற்காக இருவருமே கடுமையாக உழைத்திருந்தனர். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறு செய்ததாக நெல்லை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆர்யாவுக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் வரும் 28 ஆம் தேதி ஆர்யா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.