Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன் - காயத்ரி ரகுராம் வெளியிட்ட டி-சர்ட்

18 செப், 2020 - 14:52 IST
எழுத்தின் அளவு:
Gayathiri-Raghurams-Hindi-support-T-Shirt

ஹிந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக "தமிழ் எங்கள் வேலன், இந்தி நம்ம தோழன்" என்ற வாசகம் அச்சிடப்பட்ட டி-சர்ட்டை நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் வெளியிட்டார்.

ஹிந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சமீபத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட ஒரு சில பிரபலங்கள் ஹிந்தி தெரியாது போடா என்ற டி-சர்ட்டை அணிந்து போஸ் கொடுத்த போட்டோக்கள் வைரலாகின. சமூகவலைதளங்களில் அந்த வாசகம் டிரண்ட் ஆனது.

அதேசமயம் அப்படி டி-சர்ட் அணிந்த யுவன், ஐஸ்வர்யா போன்றவர்கள் ஹிந்தியில் பணியாற்றி உள்ளனர். அதிலும் ஐஸ்வர்யா ஹிந்தியில் பேசிய வீடியோ வைரலானது. இதனால் அவர் நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளானார். மேலும் சினிமா வாய்ப்பு வந்தால் அந்த டி-சர்ட்டை கழற்றி எறிந்து விடுவார்கள் என சில பிரபலங்கள் குரல் கொடுத்தனர். அவர்களில் நடிகையும், பா.ஜ., வை சேர்ந்த காயத்ரி ரகுராமும் ஒருவர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் 70வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இதனால் சமூகவலைதளங்களில் மோடி பிறந்தநாள் டிரண்டிங்கில் இருந்தது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. சென்னை மதுரவாயலில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்வில் பாரதிய ஜனதாவின் கலை மற்றும் கலாச்சார மாநில தலைவியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் கலந்து கொண்டு, 300 ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி, சேலைகளை வழங்கினார். நோட்டு, புத்தகம், பேனா போன்ற பொருட்களையும் 200 மாணவர்களுக்கு வழங்கினர்.

மேலும் தமிழ் எங்கள் வேலன் ஹிந்தி நம்ம தோழன் எனும் வாசகம் பொருந்திய டி--ஷர்ட்டையும் வெளியிட்டார். இந்த டி-சர்ட்டில் வேல் படமும் இந்த வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதோடு, பிரதமர் மோடியின் போட்டோ உடன் திருவள்ளுவர், பாரதியார் படங்களும் அதில் அச்சிடப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "பிரதமர் மோடி தமிழுக்கு எதிரானவர் அல்ல, வெளிநாடு செல்லும் போதெல்லாம் தமிழ் திருக்குறள் சொல்லியே பேச ஆரம்பிப்பார். அவர் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கே உள்ள சில அரசியல் தலைவர்கள் திருக்குறள் தெரியாமலும், தமிழ் தெரியாமலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்" என்றார் காயத்ரி.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாட்டம்காதலி நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் ... நீட் கருத்து : சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுரை நீட் கருத்து : சூர்யாவுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

g.kumaresan - Chennai,இந்தியா
19 செப், 2020 - 12:31 Report Abuse
g.kumaresan ஸ்டாலினை தமிழ் ஸ்கூல் அனுப்ப வேண்டும் .
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
19 செப், 2020 - 11:22 Report Abuse
Sridhar சூர்யா மேல இதுவரை நடவடிக்கை ஒண்ணுதியும் காணுமே?? கொஞ்சம் சட்டுபுட்டுன்னு உள்ள வச்சாத்தானே ஓரளவு புத்தி வரும்?
Rate this:
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
19 செப், 2020 - 10:35 Report Abuse
Bala Murugan இந்தி தயவுசெய்து வேண்டவே வேண்டாம். ஆங்கிலம் இருக்கட்டும். எல்லா மொழிகளிலும் ஆங்கிலம் கலந்து விடுகின்றது. அதனால் இந்தி சுத்தமாக வேண்டாம். யாரும் வெளிமாநிலத்துக்கு செல்ல வேண்டாம் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் இங்க வரவும் வேண்டாம்.
Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
19 செப், 2020 - 09:50 Report Abuse
Shroog நம் நாட்டு பொருளாதாரம் புதைந்து கொண்டு இருக்கிறது. அதை முதலில் சரி செய்து விட்டு, ஹிந்தியை மற்றும் மதத்தை பார்க்கலாம். சில நாடுகள் மதத்தை முன்னிறுத்தி முன்னேறி கொண்டு இருக்கிறது. நம் நாடு மதத்தினால் அழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு கட்சியில் தலைவராக யிருக்க சில நற்குணங்கள் இருக்க வேண்டும் ஜாதி வெறியை வைத்துள்ள இந்த பெண் எல்லாம் தலைவராம்...
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
19 செப், 2020 - 09:32 Report Abuse
சாண்டில்யன் புருஷனுக்கும் தோழன் பொண்டாட்டிக்கும் தோழனா?
Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in