Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேச்சிலரில் கவுரவத் தோற்றத்தில் மிஷ்கின்

18 செப், 2020 - 08:44 IST
எழுத்தின் அளவு:
Mysskin-in-GV-Prakash-film

சிவப்பு மஞ்சள் பச்சை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சசியின் உதவி இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். பேச்சிலர் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் நாயகியாக திவ்ய பாரதி நடித்து வருகிறார்.

பேச்சிலரில் நாயகனாக மட்டுமன்றி, இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணிபுரிகிறார். கொரோனா பிரச்சினையால் தடைபட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையில் சில முக்கிய காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது.

இந்நிலையில் பேச்சிலர் படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கின் கவுரவத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. மிஷ்கின் சம்பந்தப்பட்ட காட்சிகளை நான்கு நாட்கள் படமாக்கியுள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தை ராட்சசன் தயாரிப்பாளர் தில்லி பாபு தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்றுநடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று மாதவனின் 'மாறா' - ஓடிடி ரிலீஸ் மாதவனின் 'மாறா' - ஓடிடி ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
18 செப், 2020 - 10:43 Report Abuse
Aarkay My favourite director
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in