கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குனர் | 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றி மோசமாக கமெண்ட் செய்த ரசூல் பூக்குட்டி | மகாபாரத கதையை இயக்குவது எப்போது? - ராஜமவுலி வெளியிட்ட தகவல் | பிரமாண்டமாக நடைபெற இருக்கும் திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழா | ரஜினியுடன் மீண்டும் இணையும் யோகி பாபு | மூன்றாவது முறையாக ராம்குமாருடன் இணையும் விஷ்ணு விஷால் | சூர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | பொன்னியின் செல்வன் - ஆதித்ய கரிகாலனாக விக்ரம் : புதிய போஸ்டர் வெளியீடு | விரைவில் புதிய வீட்டில் குடியேறும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | நிஜத்தில் கேஜிஎப் போல தான் வாழ்க்கை இருக்கிறது ; சமந்தா |
சென்னை:நடிகர் ராமராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் கரக்காட்டக்காரன் படம் புகழ் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியானதை அடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.