நடிகை ஆத்மியாவுக்கு ஜன., 25ல் டும் டும் | துபாய் பறந்த கீர்த்தி சுரேஷ் | டுவிட்டர் எமோஜி ; தென்னிந்தியாவில் முதல் நடிகை : சமந்தா மகிழ்ச்சி | தாய்மைக்கு ரூல் புக் இல்லை : கனிகா காட்டம் | கேரளாவில் தனிமைப்படுத்தப்பட்ட சன்னி லியோன் | பிறந்தநாளில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய டொவினோ தாமஸ் | 7 ஆண்டுகளாகக் காத்திருக்கும் 'ஜில்லா' இயக்குனர் | 3ஆம் வாரத்தில் ரவிதேஜா படத்திற்கு அதிகரிக்கும் தியேட்டர்கள் | பார்வதி படத்தின் டீசரை வெளியிட்ட கமல் | அந்தாதூன் மலையாள ரீமேக்கில் ராஷி கண்ணா |
மகாநடி தெலுங்கு படத்தின் மூலம் தேசிய விருதுபெற்ற கீர்த்தி சுரேஷுக்கு தற்சமயம் தெலுங்கில் மூன்று படங்கள் கைவசம் உள்ளன. இந்தநிலையில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு அடுத்து நடிக்கவுள்ள 'சர்காரு வாரி பாட்டா' என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார் என கடந்த ஜூன் மாதமே தகவல் ஒன்று வெளியானது.
இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படாத நிலையில், தற்போது இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு பதிலாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்கலாமா என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனராம். சில நாட்களுக்கு முன் கீர்த்தி சுரேஷின் உடல் மெலிந்த புகைப்படங்கள் வெளியானது தான் இவர்கள் இந்த முடிவுக்கு காரணமாம். உடல் மெலிந்து இருக்கும் கீர்த்தி சுரேஷால் படப்பிடிப்பு சமயத்திற்குள் தாங்கள் நினைத்தபடி மாற முடியாது என்பதால் வேறு கதாநாயகியை தேடும் முடிவுக்கு வந்துள்ளார்களாம் படக்குழுவினர்.. .