இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உள்ளார். அவருக்கு ரஜினி தைரியமூட்டும் ஆடியே ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
கொரோனா பிரச்னையால் படப்பிடிப்பில் பங்கேற்காமல் வீட்டில் குடும்பத்தினர் உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார் ரஜினி. அதேசமயம் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதையொட்டி அரசியல் கட்சி ஆரம்பிப்பது உள்ளிட்ட ஆலோசனைகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். ரஜினி அரசியலுக்கு வர வேண்டும், முதல்வராக போட்டியிட வேண்டும் என தொடர்ந்து பல ஊர்களில் அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினி தீவிர ரசிகரான முரளி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு சீறுநீர பிரச்னை வேறு இருப்பதால் அவரது உடல்நிலை மோசமாக இருக்கிறது.
இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில், "தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிபெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25 ஆயிரம் என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம்" என உருக்கமாக பதிவிட்டுள்ளார். முரளியின் இந்த டுவீட் வைரலாக இந்த விஷயம் ரஜினியின் காதுகளுக்கும் எட்டியது.
இதையடுத்து முரளிக்கு ஒரு ஆடியோ ஒன்றை ரஜினி அனுப்பி உள்ளார். அதில், "முரளி, நான் ரஜினிகாந்த் பேசுறேன். உனக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்க. நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து நீங்கள் வீட்டுக்கு வந்துவிடுவீங்க. நீங்கள் குணமடைந்து வந்த பிறகு, ப்ளீஸ் என் வீட்டுக்கு குடும்பத்தோட வாங்க. நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்க வாழ்க" என தெரிவித்துள்ளார்.
#ரசிகனின்_அன்புத்தலைவன்_ரஜினி #ரஜினிகாந்த் #rajinikanthfortn #Thalaivar pic.twitter.com/7XN1J6THPz
— RIAZ K AHMED (@RIAZtheboss) September 17, 2020
ரஜினியின் இந்த ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.
ரசிகர் நெகிழ்ச்சி
"ஆசிர்வாதம் கிடைத்தது, அதிசயம், அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி என முரளி தெரிவித்துள்ளார்.