ரஜினிக்கு பதிலாக சிம்பு | சாமி சாமி பாடலுக்கு இனி ஆடப்போவதில்லை ; ராஷ்மிகா | பவன் கல்யாண் படத்தில் நான் நடிக்கவில்லை ; மாளவிகா மோகனன் | தலைவி பட வெளியீட்டில் நஷ்டம் : நீதிமன்றத்தை நாட விநியோகஸ்தர் முடிவு | தனுஷூடன் கைகோர்க்கும் கட்டா குஸ்தி இயக்குனர் | மே-11ல் வெளியாகும் ஜோதிகாவின் மலையாள படம் | குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த ஆஸ்கர் விருது பட தம்பதி | நிழலும் நிஜமும் : சத்யப்ரியாவின் குடும்பத்தை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | வளருங்கள் இது வெறும் ஷோ தான் : செந்தில் கவுண்டமணியை வைத்து ஹேட்டர்ஸை கலாய்த்த வெங்கடேஷ் பட்! | 44 வயதில் திருமணம்? - வைரலாகும் அருவி சீரியல் நடிகையின் புகைப்படங்கள் |
ஆக்ஷன் படத்திற்கு பின் விஷால் நடித்துள்ள படம் 'சக்ரா'. கிட்டத்தட்ட இரும்புத்திரை 2ம் பாகம் போன்று உருவாகி உள்ள இப்படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கி உள்ளார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முடிவடைந்து கிட்டத்தட்ட ரிலீஸிற்கு தயாராக உள்ளது. ஆனால் கொரோனா பிரச்னையால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் இப்படமும் முடங்கி உள்ளது. தற்போதைய சூழலில் தியேட்டர்கள் திரும்ப எப்போது திறக்கபடும் என்றே தெரியவில்லை. இதன்காரணமாக இப்படத்தையும் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை துவங்கி உள்ளது. தற்போதைய நிலவரப்படி இப்படத்தை அமேசான் நிறுவனம் கைப்பற்றி விட்டதாகவும், தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்தை ஓடிடியில் வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.