‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
சென்னை : எஸ்.பி.பி. உடல்நிலை சீராக இருப்பதால் எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என அவரது மகன் சரண் நேற்று தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பிற்குள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75) ஆக. 5 முதல் சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவருக்கு எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகின்றன. நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் தீவிர சிகிச்சையை மருத்துவக் குழுவினர் அளித்து வருகின்றனர்.
எஸ்.பி.பி. மகன் சரண் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு பிசியோதெரபி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை தொடர்ந்தாலும் உடல்நிலை சீராகி வருவதால் அது நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என்ற நம்பிக்கை உள்ளது. மருத்துவ குழுவினருக்கும் அப்பா குணமடைய பிரார்த்தனை செய்து வரும் நலம் விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.