Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மெக்கானிக்' போஸ்டரை காப்பியடித்த கமல்ஹாசன் 232

16 செப், 2020 - 22:46 IST
எழுத்தின் அளவு:
Kamal-232-poster-is-copy-from-Mechanic

இணையதளங்களும், சமூக வலைத்தளங்களும், மக்கள் மத்தியில் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அமெரிக்காவில் ஒரு விஷயம் நடந்தால் கூட அம்பாசமுத்திரத்தில் அடுத்த வினாடியே வாட்சப் மூலமாக வந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது சினிமா இயக்குனர்கள் காப்பி அடிக்கும் பழக்கத்தைக் குறைத்துக் கொள்ளாமல் எதையாவது காப்பியடித்து செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

'மாஸ்டர்' பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள 232வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. அதற்கான வெளியிட்ட போஸ்டரை 2011ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'மெக்கானிக்' போஸ்டரிலிருந்து காப்பியடித்திருக்கிறார்கள். மெக்கானிக் படத்தின் போஸ்டர் துப்பாக்கிகளால் துப்பாக்கி போன்று உருவாக்கப்பட்டதை போன்று கமல் பட போஸ்டரில் கமலின் உருவத்தை துப்பாக்கிகள் கொண்டு வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் ஏற்கெனவே சில பல ஹாலிவுட் படங்களை காப்பியடித்து தமிழ்ப் படங்களை எடுத்தவர் தான். இப்போது இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள படத்தின் முதல் போஸ்டரே காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படங்களை முந்தும் கமல்ஹாசன் 232இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் ... வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் உயிரிழந்தார் வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Meena -  ( Posted via: Dinamalar Android App )
18 செப், 2020 - 09:06 Report Abuse
Meena சினிமா தரம் இழந்து வெகு நாளாயிற்று ...இப்போ வெளியே தெரியுது ... இதற்கு தந்தை அட்லீ
Rate this:
17 செப், 2020 - 10:59 Report Abuse
Ravi, Chennai இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
Rate this:
Arul - thanjavur,இந்தியா
17 செப், 2020 - 09:37 Report Abuse
Arul இதிலென்ன காப்பியை கண்டுபிடித்துவிட்டீர்கள்? அது துப்பாக்கியின் உருவம். இது துப்பாக்கியால் ஆன மனித உருவம். இதிலென்ன காப்பி இருக்கிறது?
Rate this:
KayD - Mississauga,கனடா
17 செப், 2020 - 00:02 Report Abuse
KayD நான் குழந்தை ல இருந்து பாத்து வர அத காலேஜ் அதா பணக்கார கேர்ள் அதா ஏழை ஹீரோ அவன் நண்பர்கள் வில்லன் பொண்ணோட அன்னான் அல்லது அப்பா அதை இப்போவும் பாத்துட்ட தானே இருக்கோம். அதை compare பண்ணும் பொது இதெல்லாம் ஒண்ணுமில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in