Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் படங்களை முந்தும் கமல்ஹாசன் 232

16 செப், 2020 - 19:32 IST
எழுத்தின் அளவு:
kamal-232-will-overtake-indian-2-and-thalaivan-irukiran-movies

தமிழ் சினிமாவில் எப்போது என்ன நடக்கும் என யாராலும் சொல்ல முடியாது. நடக்கும் என்பார்கள் நடக்காது, நடக்காது என்பார்கள் நடந்துவிடும்.மாஸ்டர் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்றார்கள். அதில் மாற்றம் வந்து ரஜினிக்குப் பதில் கமல் நடிக்கும் கமல்ஹாசனின் 232வது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிவிட்டது.

கமல்ஹாசன் ஏற்கெனவே இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். கொரானோ தொற்று காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அடுத்து தலைவன் இருக்கிறான் படத்தின் அறிவிப்பையும் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார்.


ஏற்கெனவே, சபாஷ் நாயுடு என்ற படம் ஆரம்பமாகி அமெரிக்காவில் படப்பிடிப்பு நடந்து அப்படியே நின்று போனது. ஆனால், இந்தப் படங்கள் எப்போது வரும் என்று தெரிவதற்கு முன்னரே இன்று அடுத்ததாக 232வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்.


இந்தியன் 2 எப்போது மீண்டும் படப்பிடிப்பு நடக்கும், தலைவன் இருக்கிறான் ஆரம்பமாகுமா ஆகாதா என்று தெரியாத நிலையில் இன்றைய புதிய அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


இவற்றோடு தேவர் மகன் 2 படத்தை எடுக்கவும் கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.


கமல்ஹாசனின் 232வது படம் 2021 கோடை விடுமுறை என அறிவிக்கப்பட்டுளளதால் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான் ஆகிய படங்கள் அடுத்த வருடக் கடைசியில் வேண்டுமானால் வரலாம்.


Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் நடக்காதது ஏன் ?லோகேஷ் கனகராஜ், ரஜினி படம் நடக்காதது ... 'மெக்கானிக்' போஸ்டரை காப்பியடித்த கமல்ஹாசன் 232 'மெக்கானிக்' போஸ்டரை காப்பியடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

K.ANBARASAN - muscat,ஓமன்
21 செப், 2020 - 16:48 Report Abuse
K.ANBARASAN பாவம் யார் அந்த தயாரிப்பாளர்களோ. டவுசர் பத்திரம் - இவர் பாட்டுக்கு சொல்லிட்டே இருக்க வேண்டியது தான் . போட்ட முதலை எடுப்பதற்கு இவர் படத்தில் உத்தரவாதம் கிடையாது
Rate this:
மன்னிப்பு - Madurai,இந்தியா
17 செப், 2020 - 12:50 Report Abuse
மன்னிப்பு ஆனா ஒண்ணு இவர நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் ,தலைல துண்ட போட்டுக்கிட்டு இந்த உலகத்தை விட்டே ஓடிடுவாங்க.
Rate this:
Covaxin  (திமுக ஒழியும், தாமரை மலரும் பாருங்கடா) பகுதிநேர கோமாளி அரசியல்... பகுதிநேர கலாச்சார சீரழிவு பிக் பாஸ்... பகுதிநேர அரைவேக்காட்டு புரியாத டீவீட்டுக்கள்... இதுதான் உலக்கை நாயகன் காமகாசனின் டைம் பாஸ்...
Rate this:
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
17 செப், 2020 - 09:06 Report Abuse
VENKATASUBRAMANIAN அவரை போலவே அவருடைய படம் பற்றிய செய்திகளும் மக்களை குழப்புகின்றன
Rate this:
(விடை விரும்பி) Vidai Virumbi - யாதும் ஊரே யாவரும் கேளிர்,இந்தியா
17 செப், 2020 - 07:24 Report Abuse
(விடை விரும்பி) Vidai Virumbi Mechanic film poster copy....adapavi copy adikrathileyum niyam vama
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in