Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்

16 செப், 2020 - 18:41 IST
எழுத்தின் அளவு:
lokesh-kanagaraj-to-direct-kamal

மாநகரம், அதற்கடுத்து கைதி என இரண்டு படங்களிலேயே முன்னணி இயக்குனர் ரேஞ்சுக்கு உயர்ந்த லோகேஷ் கனகராஜ், அடுத்தததாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியதன் மூலம் அந்த இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டு விட்டார். அதையடுத்து அவர் அடுத்ததாக ரஜினிகாந்த் படத்தை இயக்கப்போகிறார் என்றும் கமல்ஹாசன் அந்தப்படத்தை தயாரிக்க போகிறார் என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பும் உருவாகி விட்டது.


இந்நிலையில் தனது அடுத்த படம் யாருடன் என்பதை இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பதாக கூறியிருந்த லோகேஷ் கனகராஜ் அந்த சர்ப்ரைஸை முடிவுக்கு கொண்டுவந்து, அடுத்ததாக கமல் நடிக்கும் படத்தையே, தான் இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். கமலின் 232வது படமாக உருவாகும் இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. அதேசமயம் எவனென்று நினைத்தாய் என்ற ஹேஷ்டாக் உடன் பட பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனால் படத்தின் தலைப்பு இதுவாக இருக்கலாம் என தெரிகிறது. இது விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற யாரென்று தெரிகிறதா பாடலில் இடம்பெற்ற ஒரு வரி என்பது குறிப்பிடத்தக்கது.


அதுமட்டுமல்ல ஒன்ஸ் அபான் எ டைம் தேர் லீவ்டு எ கோஸ்ட் என கொடுக்கப்பட்டுள்ள டேக்லைன் இது ஹாரர் படமாக இருக்குமோ, அல்லது அதிரடி டான் படமாக இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


ஏற்கனவே மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜூடன் கைகோர்த்த அனிருத், இந்தப்படத்திலும் இணைந்துள்ளார்.. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது.


கடந்த சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் ரஜினியிடம் இந்த கதையை கூறியதாகவும், ஆனால் தனக்கேற்றபடி இந்த கதை இல்லை என கூறி ரஜினி மறுத்துவிட்டதாகவும், அதனால் இந்த கதையில் கமலே நடிப்பார் என்றும் ஒரு தகவல் உலவியது. அதை மெய்ப்பிக்கும் விதமாக இப்போது இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.



Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
82 வயது - பிட்னஸில் அசத்தும் விஷால் தந்தை82 வயது - பிட்னஸில் அசத்தும் விஷால் ... பிரபாஸின் தம்பியாக நடிக்கும் அதர்வா பிரபாஸின் தம்பியாக நடிக்கும் அதர்வா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

16 செப், 2020 - 22:58 Report Abuse
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இப்பயும் வாழ்ந்து கிட்டு தான் இருக்கு ?? தினமும் புரியாத ட்வீட் போட்டு கிட்டு ??? இந்த படத்தின் ரிலீஸ் இவர இந்தியாவை விட்டு கிளம்புகிறேன் என்று சொன்னார் வெச்சிக்கோ விரட்டி அடிச்சு விடுங்க
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in