இந்திய சினிமாவின் நாயகன் : மணிரத்னத்தை வாழ்த்திய கமல் | குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா | கீர்த்தி சுரேஷிற்கு அழகு, அறிவு இரண்டுமே இருக்கிறது : கமல் | சார்பட்டா பரம்பரை 2 எப்போது துவங்கும்? | கார்த்தி படத்தில் இணைந்த அரவிந்த்சாமி | மீனவர் கதாபாத்திரத்தில் நாக சைதன்யா | எதிர்நீச்சல் தொடரில் முக்கிய ரோலில் என்ட்ரியாகும் திருச்செல்வம் | அன்பிற்காக மட்டுமே பக்கபலமாக நிற்பவர் விஜய் தேவரகொண்டா : சமந்தா நெகிழ்ச்சி | ஜெயிலர் காமெடி வேற மாதிரி இருக்கும் : யோகிபாபு வெளியிட்ட புது தகவல் | டெவில் படம் மூலம் இசையமைப்பாளரான மிஷ்கின் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
ஊரடங்கு தளர்வில் படப்பிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்த் திரையுலகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. முன்னணி நடிகர்கள் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் தெரிவிப்பதால், பெரிய படங்களின் படப்பிடிப்புகள் இன்னமும் ஆரம்பமாகவில்லை. ஆனபோதும் விரைவில் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
அடுத்த மாதத்தில் வலிமை படப்பிடிப்புகள் ஆரம்பமாகும் எனக் கூறப்படுகிறது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பையும் விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஈசிஆர் சாலையில் ஒரு அரங்கு உருவாகி வருகிறது. அங்கு நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காட்சிகளைப் படமாக்க சிவா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் பிரபல நடிகரான ஜாக்கி ஷெராப் தமிழிலும் ஆரண்ய காண்டம், பிகில் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். கடந்தாண்டு வெளியான விஜய்யின் பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஜாக்கி ஷெராப்.
ஈசிஆரில் திட்டமிடப்பட்டுள்ள படப்பிடிப்பில் இவர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷுடன் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளாராம். கொரோனா பிரச்சினைகள் முடிந்த பிறகு ரஜினி, ஜாக்கி ஷெராப் சம்பந்தப்பட்ட காட்சிகளை அடுத்தாண்டு படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.