Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சத்தமில்லாமல் சாதித்த சமந்தா

16 செப், 2020 - 16:27 IST
எழுத்தின் அளவு:
samandha-makes-new-record-in-instagram

எத்தனைப் படங்களில் நடிக்கிறோம், எந்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கிறோம் என்பதில் உள்ள போட்டியைப் போல், சமீபகாலமாக சமூகவலைதளங்களில் யாருக்கு அதிகளவில் பாலோயர்கள் உள்ளார்கள் என்ற போட்டியும் நடிகைகள் மத்தியில் உள்ளது. இதனாலேயே அடிக்கடி தங்களது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு பாலோயர்களின் எண்ணிக்கையைக் கூட்டும் நடவடிக்கையில் நடிகைகள் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் நடிகை சமந்தாவை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனால் தனது பாலோயர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம்தான் சமந்தாவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனாக உயர்ந்தது. தற்போது மூன்றே மாதங்களில் 12 மில்லியனாக உயர்ந்துள்ளது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாகவே நடித்து வரும் சமந்தா, சமீபகாலமாக சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாகவே இருந்து வருகிறார். அதுவும் குறிப்பாக இந்த ஊரடங்கு காலத்தில் தன்னுடைய முக்கிய செயல்பாடுகள் குறித்து பதிவிடுவது மற்றும் ரசிகர்களிடையே கலந்துரையாடுவது போன்றவற்றை செய்து வருகிறார். இதுவே அவரது பாலோயர்கள் கூட முக்கியக் காரணமாக உள்ளது.


முன்னதாக சமந்தாவை ஓவர்டேக் பண்ணி 11 மில்லியன் ரசிகர்களை அடைந்தார் பூஜா ஹெக்டே. இப்போது சத்தமே இல்லாமல் 12 மில்லியன் ரசிகர்களை கடந்து பூஜா ஹெக்டேவை பின்னுக்குத் தள்ளி உள்ளார் சமந்தா. இதனால் சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாய் பல்லவிக்கு சரியான சம்பளம்சாய் பல்லவிக்கு சரியான சம்பளம் ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப் ரஜினிக்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in