ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தமிழ் நடிகையான சாய் பல்லவிக்கு தமிழ் சினிமா இன்னும் பெரிய அளவில் ஆதரவு தரவில்லை. ஆனால், மலையாளமும், தெலுங்கும் அவரைக் கொண்டாடுகின்றன. சிறந்த நடனத் திறமையும், நடிப்புத் திறமையும் கொண்ட சாய் பல்லவிக்கு தெலுங்கில் அருமையான படங்களும் அற்புதமான கதாபாத்திரங்களும் அமைகின்றன, புதிதாக தேடியும் வருகின்றன.
தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா ஜோடியாக லவ் ஸ்டோரி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து நானி ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தில் நடிப்பதற்காக அவரிடம் பேசிய போது முதலில் நடிக்க மறுத்தாராம். ஒரு படத்தை உடனடியாக நடிக்க சாய் பல்லவி சம்மதிக்க மாட்டாராம்.
தயாரிப்பாளரும், இயக்குனரும் தொடர்ந்து பேசிய சாய் பல்லவியை நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டார்களாம். அப்படத்திற்காக சாய் பல்லவிக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் பேசியிருப்பதாகத் தகவல். துளியும் கிளாமர் காட்டாத சாய் பல்லவிக்கு அவ்வளவு சம்பளமா என சில கிளாமர் நாயகிகள் பொருமிக் கொண்டிருக்கிறார்களாம்.
வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி தங்கையாக நடிக்கவும் சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.