Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: உறுதி செய்தார் விஜய் சேதுபதி

16 செப், 2020 - 15:52 IST
எழுத்தின் அளவு:
vijay-sethupathi-confirms-KaPaeRanasingam-OTT-release

நயன்தாரா நடித்த அறம் படம் பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஹீரோயின் என்றாலும் அவரது கணவராக அதாவது ரணசிங்கமாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் சமுத்திரகனி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விருமாண்டி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.

விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் ரணசிங்கத்தை சதி திட்டம் தீட்டி கொன்று விடுவார்கள். கணவனின் லட்சியத்தை மனைவி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதை என்று கசிந்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரும் இதனை உறுதிப்படுத்துகிறது.


கடந்த பிப்ரவரி மாதம் 5ந் தேதியே வெளிவந்திருக்க வேண்டிய படம். கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக கடந்த மாதம் முதலே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சாதி பிரச்சினையை தூண்டும்  பாடல்: சூரரைப்போற்று படத்துக்கு தடை கேட்டு வழக்குசாதி பிரச்சினையை தூண்டும் பாடல்: ... சாய் பல்லவிக்கு சரியான சம்பளம் சாய் பல்லவிக்கு சரியான சம்பளம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in