பாரிஸ் ஜெயராஜ் டிரைலருக்கு வரவேற்பு | பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு மேளதாளத்துடன் வரவேற்பு! | காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு |
நயன்தாரா நடித்த அறம் படம் பாணியில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் க/பெ ரணசிங்கம். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ்தான் ஹீரோயின் என்றாலும் அவரது கணவராக அதாவது ரணசிங்கமாக விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் சமுத்திரகனி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விருமாண்டி என்ற புதுமுகம் இயக்கி உள்ளார்.
விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக போராடும் ரணசிங்கத்தை சதி திட்டம் தீட்டி கொன்று விடுவார்கள். கணவனின் லட்சியத்தை மனைவி எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதை என்று கசிந்திருக்கிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரும் இதனை உறுதிப்படுத்துகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 5ந் தேதியே வெளிவந்திருக்க வேண்டிய படம். கொரோனா பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருப்பதாக கடந்த மாதம் முதலே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது விஜய்சேதுபதி தனது டுவிட்டரில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார்.