ஆமிர்கான் படத்தின் தோல்வி ; ரசிகர்களுக்கு நன்றிசொன்ன விஜயசாந்தி | டொவினோ தாமஸ் ஜோடியாக நடிக்கும் மடோனா | வாரிசு என்பதால் மட்டுமே வெற்றி பெற முடியாது: அதிதி ஷங்கர் பதில் | விருமன் திரைக்கு வந்த ஒரே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய படக்குழு! | கவர்ச்சிக்கு மாறிய லாஸ்லியா! | செப்.,2ல் வருகிறது அரவிந்தசாமியின் ரெண்டகம் | விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? | 75வது சுதந்திர தினம்: கமல்ஹாசன் வாழ்த்து | 30 ஆண்டுகளை நிறைவு செய்த 'சூரியன்' | லால் சிங் சத்தா: விஜய் சேதுபதி ஜஸ்ட் எஸ்கேப் |
கன்னட சினிமா உலகில் போதை மருந்து புழக்கம் மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகள், கைதுகள் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பிரபல நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்கும் இந்த வழக்கின் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.
இந்த நிலையில் பிரபல கன்னட நடிகை ஆண்ட்ரிதா ராயும் இந்த வழக்கில் சிக்குகிறார். போதை மருந்து கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறவர் சேக் பைசல். இவர் உலக நாடுகளில் கேளிக்கை விடுதிகளை நடத்துகிறவர். தற்போது இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருக்கிறார்.
இது தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு நடிகை ஆண்ட்ரிதா ராயின் வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆண்ட்ரிதா ராய் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள கேசினோவில் (சூதாட் கிளப்) என் படம் தொடர்பான கருத்தரங்கம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள கேசினோவின் அதிபர் சேக் பைசல் என்னை அழைத்துள்ளார். அவருக்கு எனது நன்றி. என்று தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் சேக் பைசலுக்கும், ஆண்ட்ரிதா ராயுக்கு தொடர்பு இருப்பத உறுதி செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கருதுகிறார்கள்.
ராஜஸ்தானை சேர்ந்த ஆண்ட்ரிதா கடந்த 2008ம் ஆண்டு முதல் கன்னடம், தெலுங்கு, பெங்காலி, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதுவரை 30க்கும் மேற்பட்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கேசினோ என்ற வெப் சீரிசில் நடித்திருந்தார். சமீபத்தில்தான் அவர் நடிகர் டிக்காந்தை காதல் திருமணம் செய்தார்.