Advertisement

சிறப்புச்செய்திகள்

போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா? - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம்? | மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி | சீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதி பிரச்சினையை தூண்டும் பாடல்: சூரரைப்போற்று படத்துக்கு தடை கேட்டு வழக்கு

16 செப், 2020 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Case-filed-in-HC-against-soorarai-pottru-movie

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ள படம் சூரரைப்போற்று. சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் "மண் உருண்டை மேல மனுஷப் பய ஆட்டம் பாரு..." என்று தொடங்கும் பாடல் ஜாதி பிரச்சினையை தூண்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சூரரைப்போற்று படத்தில் வரும் மண்ணு உருண்டை மேல.. மனுச பய ஆட்டம் பாரு என்று தொடங்கும் பாடலில் "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல்சாதிகாரனுக்கு இரண்டு கொம்பிருந்தா காட்டுங்கய்யா?" என்ற வரிகள் வருகிறது.


அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற வரிகள் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் விதமாகவும் மேலும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கலாம் எனவே சூரரைப்போற்று திரைப்படத்தை 2022ம் ஆண்டு வரை வெளியிட தடை வேண்டும். என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.


இந்த மனு நேற்று(செப்.,15) விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன்பே போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை அடுத்து மனுதாரர் மீண்டும் தர்மபுரி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுக்குமாறும், தர்மபுரி மாவட்ட எஸ்.பி. இதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா?'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா? க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: உறுதி செய்தார் விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Bhaskaran - Chennai,இந்தியா
18 செப், 2020 - 08:35 Report Abuse
Bhaskaran சூர்யாவுக்கு விளம்பரம் கிடைக்கும் இதை வைத்து படம் ஓட்டுவார்
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இதொன்றும் புதிதல்ல இதே கருத்துள்ள "உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு" ன்னு வாலி பாடலை MGR பாடியுள்ளார்
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
18 செப், 2020 - 01:46 Report Abuse
Ram PAdathuku oru kooduthal vilambaram
Rate this:
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் சாம்பல் நிறம் ஒரு குட்டி கருஞ்சாந்தின் நிறம் ஒரு குட்டி எந்த நிறத்திருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ - பாரதி
Rate this:
aashik - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
17 செப், 2020 - 14:16 Report Abuse
aashik சூர்யாவுக்கு பாஜக பிரச்சனை கொடுக்கத் தொடங்கிவிட்டது . பாஜக வழக்கமாக செய்யும் கேவலமான அரசியல் இது.யார் யார் பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணலியூ ,அவர்களை இதைபோல் தான் கஷ்டப்படுத்துவார்கள்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in