Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதி பிரச்சினையை தூண்டும் பாடல்: சூரரைப்போற்று படத்துக்கு தடை கேட்டு வழக்கு

16 செப், 2020 - 15:21 IST
எழுத்தின் அளவு:
Case-filed-in-HC-against-soorarai-pottru-movie

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ள படம் சூரரைப்போற்று. சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இதில் "மண் உருண்டை மேல மனுஷப் பய ஆட்டம் பாரு..." என்று தொடங்கும் பாடல் ஜாதி பிரச்சினையை தூண்டுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மபுரி மாவட்டம், அஞ்சேஹல்லி கிராமத்தை சேர்ந்த ஏ.கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.


அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: சூரரைப்போற்று படத்தில் வரும் மண்ணு உருண்டை மேல.. மனுச பய ஆட்டம் பாரு என்று தொடங்கும் பாடலில் "கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா? அந்த மேல்சாதிகாரனுக்கு இரண்டு கொம்பிருந்தா காட்டுங்கய்யா?" என்ற வரிகள் வருகிறது.


அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற வரிகள் மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டும் விதமாகவும் மேலும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற நேரத்தில் அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதாக்கலாம் எனவே சூரரைப்போற்று திரைப்படத்தை 2022ம் ஆண்டு வரை வெளியிட தடை வேண்டும். என மனுவில் குறிப்பிடபட்டுள்ளது.


இந்த மனு நேற்று(செப்.,15) விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக 5 மாதங்களுக்கு முன்பே போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதை அடுத்து மனுதாரர் மீண்டும் தர்மபுரி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுக்குமாறும், தர்மபுரி மாவட்ட எஸ்.பி. இதுகுறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா?'மாஸ்டர்' வந்தாலும் அதே நிலைமையா? க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: உறுதி செய்தார் விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம் ஓடிடியில் ரிலீஸ்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in