Advertisement

சிறப்புச்செய்திகள்

போதை விவகாரம் - சுத்தம் செய்ய சரியான நேரம் : ரவீனா | ஓடிடியால் தியேட்டர்கள் அழியுமா? - சீனு ராமசாமி | ஐஜி கீதா பிரபாகர் ரிட்டர்ன்ஸ் : ஆஷா சரத் பெருமிதம் | இறுதிக்கட்ட பணிகளில் பாலாவின் விசித்திரன் | திரிஷ்யம்-2 அப்டேட் ; பழைய முகங்களும் புதிய முகங்களும் | உன்னி முகுந்தனை புரூஸ்லீயாக மாற்றும் புலிமுருகன் இயக்குனர் | போதை பொருள் வழக்கு : தீபிகா உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு சம்மன் | அக்டோபர் முதல் வாரத்தில் மீண்டும் அண்ணாத்தே படப்பிடிப்பு தொடக்கம்? | மாஸ்டர் தியேட்டரில் தான் ரிலீசாகும்: லோகேஷ் கனகராஜ் உறுதி | சீரியல் நடிகைக்கு கொரோனா : படப்பிடிப்பில் கலந்து கொண்ட 22 பேருக்கு தொற்று! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்கள் மூடல் : எவ்வளவு நஷ்டம் தெரியுமா?

16 செப், 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Corona:-Theatres-closed---Rs.9000-crore-loss

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஒவ்வொரு மாநிலமாக சினிமா தியேட்டர்களை மூட சம்பந்தப்பட்ட அரசுகள் உத்தரவிட்டன. சினிமா தியேட்டர்களை மூடி ஆறு மாதங்களாகிவிட்டது.

மீண்டும் சினிமா தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. கடந்த வாரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அக்டோபர் மாதம் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என தகவல் வெளியானது. ஆனால், அது குறித்து அரசு இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை என்றே சொல்லி வருகிறார்கள்.

இந்த ஆறு மாதங்களாக சினிமா தியேட்டர்களை மூடியதால் சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இந்த நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் தாங்கள் திணறி வருவதாக சினிமா தியேட்டர்கள் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

சினிமா தியேட்டர்கள் மூடியதில் மட்டும் அவ்வளவு நஷ்டம் என்றாலும். அதே சமயம் படங்களை வெளியிட முடியாத காரணத்தினால் தயாரிப்பாளர்களுக்கும் நஷ்டம் அதிகமாகவே இருக்கும்.

இந்த நஷ்டத்தைச் சரிக்கட்டத் தியேட்டர்களைத் திறந்தாலும் மக்கள் வந்தால்தான் மேலும் நஷ்டம் ஆகாமல் தடுக்க முடியும். 200 பேர் அமர வேண்டிய தியேட்டரில் 20 பேர் மட்டுமே வந்தால் அந்த நஷ்டம் இன்னும் அதிகமாகுமே தவிர குறையாது.

மற்ற தொழில்கள் ஓரளவிற்கு தங்கள் நஷ்டத்தை சரிக்கட்டி நடைபெற ஆரம்பித்துவிட்டது. ஆனால், சினிமா தொழில் மட்டும் மீண்டும் முழுமையாக ஆரம்பமானாலும் நஷ்டத்தைத் தவிர்க்க மேலும் ஒரு வருட காலம் ஆகலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
வாங்க மீனா வரவேற்கும் மோகன்லால்வாங்க மீனா வரவேற்கும் மோகன்லால் அடுத்து யார் படம்? - ரகசியம் உடைக்கும் லோகேஷ் கனகராஜ்! அடுத்து யார் படம்? - ரகசியம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

S.Ganesan - Hosur,இந்தியா
20 செப், 2020 - 12:08 Report Abuse
S.Ganesan இதனால் நாட்டுக்கு ஒன்றும் கேடு இல்லை. சினிமா பார்ப்பதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனித நேரம் வீணாகிறது. சினிமாவினால் நாடகம், தெருக்கூத்து , பல நாட்டுப்புற கலைகள் அழிந்து போய் விட்டன. பலர் வாழ்வை இழந்து போயினர். அதற்கு சினிமாவே மூல காரணம். மேலும் சினிமாக்காரர்கள் பல காலமாக கோடி கோடியாக சம்பாதித்து விட்டனர். இப்போது இந்த இழப்பு ஒன்றும் பெரிதல்ல. மேலும் இவர்களால் நிரந்தர வருமானம் பெறுவது யாரும் இல்லை. இவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் சினிமா தொழிலில் உள்ள அடிமட்ட தொழிலாளிகளுக்கு ஒரு உபயோகமும் கிடையாது. இவர்கள் சம்பாதிப்பது எல்லாம் மக்களின் உழைப்பே. அதை இவர்கள் ஒரு சிறு கூட்டமாக உறிஞ்சி விடுகிறார்கள். இப்போது சினிமா இல்லாததால் மக்களின் பணம் மக்களுக்கே பயன்படுகிறது. சினிமாவினால் நாடு பொருளாதாரமோ அல்லது கட்டமைப்போ மேம்படுவதில்லை. தேவையற்ற பிரச்னைகள்தாம் ஏராளம். இவர்கள் இல்லாதிருப்பதே நல்லது.
Rate this:
thonipuramVijay - Chennai,இந்தியா
17 செப், 2020 - 10:44 Report Abuse
thonipuramVijay திரையரங்குகள் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது இது இன்னும் உரிமையாளர்களுக்கு ஏன் புரியவில்லை ??? இனி நீங்கள் திறந்தாலும் யாரும் வரப்போவது இல்லை. இதுக்குதான் பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழியை சொல்லி வைத்தார்கள். Ticket விலை, parking charges, தண்ணீர் பாட்டில் கூட எடுத்து செல்லக்கூடாது என்ற கேடுகெட்ட கெடுபிடி, பாப்கார்ன் cooldring பல மடங்கு விலை இப்படி பல கொள்ளை. ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்தால் 2000 ரூபாய் கொள்ளை போகிறது. அதற்கு வீட்டில் டிவி யில் பார்ப்பது மிக எளிது , பன மிச்சம். உரிமையாளர்கள் கொள்ளை அடித்து தின்றது போதும், இனி தலையில் துண்டை போட்டு திரையரங்கை விற்றுவிட்டு வேறு பிழைப்பை பார்க்கவும்.
Rate this:
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2020 - 22:17 Report Abuse
Venkat சினிமாக்காரங்க ஏற்கெனவே மக்களை ஏமாற்றி அளவுக்கு அதிகமாக சம்பாதித்துள்ளீர்கள் தானே.
Rate this:
Krishnamoorthi A N - Sathyamangalam,இந்தியா
16 செப், 2020 - 20:19 Report Abuse
Krishnamoorthi A N தியேட்டர் திறந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்ட்டத்தை விட அதிகம் பாமர மக்களுக்குத்தான் இழப்பு அதிகம், நடிகர்களுக்கு போஸ்டர் adippatju, பாலாபிஷேகம் செய்வது தியேட்டர்களில் டிக்கெட் கொள்ளை வாகன டோக்கன் கொள்ளை கண்டேன் கொள்ளை என பலவகைகளில் இழப்பு. தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த கருமாந்திரங்கள் எல்லாம் இல்லை.
Rate this:
Prakash - Chennai,இந்தியா
16 செப், 2020 - 18:18 Report Abuse
Prakash Do you know how much is saved by head of family.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in