Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரியா விவகாரம் : ஊடகங்களுக்கு எதிராக பாலிவுட் பகிரங்க கடிதம்

16 செப், 2020 - 08:50 IST
எழுத்தின் அளவு:
Bollywood-celbrities-supports-Rhea-chakraborty

மும்பை : போதை பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரியா சக்ரவர்த்தியை கொச்சைப்படுத்தி செய்தி வெளியிடுவதை நிறுத்தக் கோரி பாலிவுட் கலைஞர்கள் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக அவரது தோழி ரியா சக்ரவர்த்தி சகோதரர் ஷோவிக் உள்ளிட்ட 18 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்தி நடிகர் சோனம் கபூர், இயக்குனர்கள் அனுராக் காஷ்யப், மீரா நாயர் உள்ளிட்ட பாலிவுட் கலைஞர்கள் 2500 பேர் ஊடகங்களுக்கு பகிரங்க கடிதம் அனுப்பியுள்ளனர்.

செய்தியை வேட்டையாடுங்கள் ; பெண்களை அல்ல என்ற தலைப்பில் வெளியான கடிதத்தின் விபரம் : பத்திரிகை தர்மம், மனிதாபிமானம், கண்ணியம் ஆகியவற்றை காற்றில் பறக்க விட்டு ஒரு பெண் என்றும் பாராமல் ரியாவை காயப்படுத்துகிறீர்கள். பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து உங்கள் கேமரா கண்களால் ரியாவின் தனிநபர் உரிமையை பறிக்கிறீர்கள். இதேபோல சல்மான் கான், சஞ்சய் தத் விவகாரங்களில் நீங்கள் செயல்பட்டீர்களா? எவ்வளவு கரிசனத்துடன் செய்தி வெளியிட்டீர்கள்.

ஏன் ரியாவையும் அவரது குடும்பத்தையும் கேவலமாக சித்தரித்து வலைதளத்தில் செய்தி வெளியிடுகிறீர்கள். கொரோனாவால் நாடு சந்தித்துள்ள சுகாதார பிரச்னை, மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு போன்ற பல விஷயங்கள் இருக்க மலிவான விளம்பரத்திற்காக ரியாவை தாக்குவது சரியல்ல. ரியா மீதான சூன்யவேட்டையை நிறுத்தி செய்திக்காக வேட்டையாடுங்கள். உங்கள் பணியை சரியான முறையில் பொறுப்போடு செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - நெட்டிசன்கள் விளாசல்சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - ... ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் பேச்சரா ரூ.58 கோடி லாபம் சம்பாதித்து தந்த தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Aarkay - Pondy,இந்தியா
18 செப், 2020 - 09:30 Report Abuse
Aarkay நல்லா முட்டு கொடுக்கறாங்கப்பா எங்க எல்லாரோட வண்டவாளமும் தண்டவாளம் ஏறுமோ என்ற பயம், உதறல்.... பெண் ஆணுக்கு சமம் என்கிறீர்கள். பெண்ணென்றும் பாராமல் என்று allowance-ம் எதிர்பார்க்கிறீர்கள் இதென்ன நியாயம்? இதே செயலை ஆண் செய்திருந்தால், முட்டுக்கொடுக்கமாட்டீர்களா? என்ன நியாயம் இது?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in