Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நிசப்தம்' - அமைதியைத் தவிர்ப்பாரா அனுஷ்கா ?

15 செப், 2020 - 19:54 IST
எழுத்தின் அளவு:
Did-Anushka-breaks-the-silence

ஓடிடி தளங்களில் வெளியாகும் அனைத்து படங்களின் மீதும் எதிர்பார்ப்பு வருவதில்லை. ஒரு சில படங்கள் மீது தான் எதிர்பார்ப்பு அதிகம் வருகிறது. அப்படி ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'நிசப்தம்'.

அனுஷ்கா, மாதவன், அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் ஜுன் மாதத்திலேயே ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஆனால், படத்திற்கான பிரமோஷன்களுக்கு வர மாட்டேன் என அனுஷ்கா சொன்னதால் படத்தை வாங்க முடிவு செய்திருந்த ஓடிடி நிறுவனம் பின்வாங்கியது.

அதன்பின் படத்தின் தயாரிப்பாளர் தலையிட்டு அனுஷ்காவிடம் பேசியதாகச் சொன்னார்கள். அவரும் படத்திற்கு பிரமோஷன் செய்து தர சம்மதித்துவிட்டார் என்றார்கள்.

தற்போது படத்தை அதிக விலை கொடுத்து ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் வாங்கிவிட்டதாம். அக்டோபர் மாதம் 2ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். 'நிசப்தம்' என்ற படத்தின் தலைப்புக்கேற்ப அமைதியாக கண்டும் காணாமல் போவாரா அனுஷ்கா, அல்லது, தயாரிப்பாளரிடம் சொன்னபடி பிரமோஷனுக்கு வருவாரா என்று டோலிவுட்டில் சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம் : உருகிய விக்கிநயன்தாரா அம்மாவின் பிறந்தநாள் ... படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக சக்தியால் உயிர்தப்பியதாக நடிகர் ஜாக்கி சான் பேட்டி படப்பிடிப்பில் விபத்து: தெய்வீக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in