விஜய் - லோகேஷ் கனகராஜ் படத்திற்கு ‛லியோ' டைட்டில்: அக்.,19ல் ரிலீஸ் | ஓணம் கொண்டாட்டமாக வெளியாகிறது துல்கர் சல்மானின் 'கிங் ஆப் கோதா' | ஒரே நேரத்தில் இரண்டு மெகா இயக்குனர்களின் படங்களில் நடிக்கப் போகும் சூர்யா! | திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா! | விஜய் 67 படத்தில் நடிக்க 10 கோடி சம்பளம் வாங்கும் சஞ்சய் தத்! | சாகுந்தலம் படத்திற்காக 30 கிலோ எடை கொண்ட புடவை அணிந்து நடித்த சமந்தா! | சினிமாவை விட்டு விலகினாரா பாண்டிராஜ்?: விவசாயத்தில் தீவிரம் | நானாக பட்டம் போட்டுக் கொள்ள மாட்டேன்: ஆர்ஜே.பாலாஜி | தமிழில் உருவாகும் அபோகலிப்டிக் சயின்ஸ் பிக்சன் படம் | காளிகாம்பாள் கோவிலில் ஹன்சிகா வழிபாடு |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். விக்ரம் வேதா, கைதி, இஸ்பேட்ட ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்துள்ளார்.
இதுகுறித்து சமூகவலைதளத்தில்,"எனது சகோதரனுக்கு பிறந்தநாள் பரிசளிக்க ஆன்லைனில் ஆப்பிள் வாட்ச் ஆர்டர் செய்திருந்தேன். அழகாக பேக்கிங் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதை பிரித்து பார்த்தபோது உள்ளே கற்கள் மட்டுமே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தினடம் புகார் அளித்தோம். ஆனால் எங்களது பணத்தை திருப்பி தர முடியாது என கூறிவிட்டனர். தயவு செய்து ஆன்லைனில் பொருட்களை வாங்க எண்ணி ஏமாறாதீர்கள், ஏமாற்றுக்காரர்கள் என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.