Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்கள் திறப்பு மேலும் தள்ளிப் போகும்?

15 செப், 2020 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Theatre-open-may-be-dely

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் தியேட்டர்களை மூடி ஆறு மாதங்கள் ஆகிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்ற நிச்சயமற்ற நிலையே இன்று வரை தொடர்கிறது.

கடந்த வாரம் டில்லியில் திரையுலக சங்க நிர்வாகிகள் சிலருடன் மத்திய அரசு சார்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன்பின் தியேட்டர்கள் அக்டோபர் மாதம் திறக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது. ஆனால், மத்திய அரசு இதுவரையிலும் தியேட்டர்கள் திறக்கப்படுவது பற்றி எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்ற தகவல்தான் தற்போது பரவி வருகிறது.

ஆறு மாதங்களாக தியேட்டர்கள் மூடி வைக்கப்பட்டிருப்பது திரையுலகத்தினருக்கு பெரும் இழப்பாகத்தான் உள்ளது. இந்தியா முழுவதும் தியேட்டர்களில் வேலை செய்பவர்கள் பலர் வேலையை இழந்தும், பலர் சம்பளத்தை இழந்தும் தவித்து வருகிறார்கள்.

தியேட்டர்கள் மூடப்பட்டதால் நூற்றுக்கணக்கான படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகாமல் தேங்கிக்கிடக்கின்றன. இதன் தாக்கம் அடுத்த வருடமும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்திற்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் அதற்குள்ளாக அரசு நல்ல முடிவை எடுக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
குடும்பத்தினருடன் பிறந்தநாள் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன்குடும்பத்தினருடன் பிறந்தநாள் ... ஆப்பிள் வாட்சிற்கு பதில் கற்கள் - ஆன்லைனில் ஏமாந்த இசையமைப்பாளர் சாம்.சிஎஸ் ஆப்பிள் வாட்சிற்கு பதில் கற்கள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Nallavan - ERODE,இந்தியா
15 செப், 2020 - 18:49 Report Abuse
Nallavan மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த ஜென்மங்கள் இன்று கவலை படுவது போல நடிக்கின்றன.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in