Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முடிவை மாற்றிய அஜித் : மீண்டும் தொடங்கும் வலிமை படப்பிடிப்பு?

15 செப், 2020 - 14:22 IST
எழுத்தின் அளவு:
Valimai-shoot-soon-to-be-start

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. ஐதராபாத் சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவடைந்து விட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பிரச்சினை முழுவதும் முடிவடைந்த பிறகு, அல்லது தடுப்பூசி அமலுக்கு வந்த பிறகு தான் மீண்டும் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என அஜித் கறாராகக் கூறி விட்டதாக முன்னர் கூறப்பட்டது. இதனால் வலிமை படப்பிடிப்பு தாமதமாகும் எனவும் தகவல்கள் வெளியாகியது.

இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வைரலானது. அதுபற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அடுத்த மாதம் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் பணியாற்றும் அனைத்து நடிகர்களுக்கும் இம்முடிவு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதற்கு அஜித் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது.

தகுந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் வலிமை படப்பிடிப்பு நடைபெறும் என்றும், வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருந்த காட்சிகள் இந்தியாவிலேயே படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கொரோனா பிரச்னை முழுவதுமாக தீர மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதால் இந்த முடிவை அஜித்து எடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஓவியம் வரையும் ஸ்ரீதேவியின் மகள்கள்ஓவியம் வரையும் ஸ்ரீதேவியின் மகள்கள் ஷாரூக் ஜோடியாகும் டாப்ஸி? ஷாரூக் ஜோடியாகும் டாப்ஸி?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

samvijayv - Chennai,இந்தியா
16 செப், 2020 - 15:37 Report Abuse
samvijayv தன் படம் எப்பொழுது வெளிவருமோ.., அப்பொழுது மட்டும் அரசியல் பேசி ரசிகர்களை முளைச் சலவை செய்து பணம் பறிக்கும் நடிக்கற்களில் இவர் சற்று பரவலை.
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
16 செப், 2020 - 06:05 Report Abuse
Ram BOLLYWOOD producer - Pathu sir
Rate this:
Shiva -  ( Posted via: Dinamalar Android App )
15 செப், 2020 - 20:03 Report Abuse
Shiva காசு வாங்கியாச்சுல. நடிச்சிதான் ஆகனும் அசித்துகுமார்... ஆனா இவன் அப்படியே நடிச்சிட்டாலும்...
Rate this:
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னைநீங்கள் விஜய் ரசிகரா? கேள்வி புரிகிறதா?...
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
15 செப், 2020 - 15:45 Report Abuse
S. Narayanan அஜித் மிகவும் நாகரீகமான பெருந்தன்மையான மற்றும் மற்றவர்களை மதிக்கும் எண்ணம் கொண்ட நல்ல மனிதர். அவர் ஷூட்டிங் நிறுத்தப்பட்டால் படம் வெளியிடமுடியாது. அதனால் பல குடும்பங்கள் அவஸ்தை பட நேரிடலாம் என்பதை நன்கு உணர்ந்தவர்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in