Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மும்பையை விட்டு கிளம்பிய கங்கனா: கனத்த இதயத்துடன் செல்வதாக டுவீட்

15 செப், 2020 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Kangana-go-away-from-Mumbai

பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு வாரிசு ஆதிக்கம் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். சுஷாந்த் தற்கொலைக்கு தூண்டியவர்களை மகாராஷ்டிரா அரசு காப்பாற்றுகிறது என்றும் சொன்னார். இதனால் மகாராஷ்டிர மாநில அமைச்சர்களும், சிவசேனா தலைவர்களும் கங்கானவை மிரட்டினார்கள். கங்கனாவும் மும்பை என்ன மினி பாகிஸ்தானா, அங்கு ஆள்வது தலிபான்களா என்று கேட்டார்.

கங்கனா ரணவத்துக்கும் மராட்டிய அரசுக்கும் இடையில் வார்த்தை போர் ஏற்பட்டது. இதற்கிடையே மத்திய அரசு கங்கனா ரணவத்துக்கு ஓய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது. இதனால் கடந்த 9ந் தேதி மும்பை வந்தார் கங்கனா. அதேசமயம் மகாராஷ்டிர அரசு மும்பையில் உள்ள கங்கனா அலுவலகம் விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி இடிக்கத் தொடங்கியது. இதனால் கங்கனா, கோர்ட் நாடி தடை வாங்கினார். மேலும் ஆளுநரையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் இருந்து வெளியேறி, தற்போது வசித்து வரும் மணாலிக்கு சென்றுள்ளார் கங்கனா. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: கனத்த இதயத்தோடு மும்பையை விட்டு வெளியேறுகிறேன். எனக்கு எதிரான துஷ்பிரயோகம், எனது அலுவலகத்தை இடிக்க முயற்சி மேற்கொண்டது, என்னை சுற்றி ஆயுதமேந்தியவர்களின் பாதுகாப்பு இவற்றை பார்க்கும்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் மும்பையை ஒப்பிட்டது 2 மடங்கு சரியானது என்றே சொல்வேன். என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
கவர்னருடன் கங்கனா சந்திப்பு ஏன்.?கவர்னருடன் கங்கனா சந்திப்பு ஏன்.? சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - நெட்டிசன்கள் விளாசல் சரக்கு அடிக்க கற்று தரும் நடிகை - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16 செப், 2020 - 23:35 Report Abuse
Ramesh R போ போ போய் வேலையை பாரு ........
Rate this:
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16 செப், 2020 - 16:13 Report Abuse
Apposthalan samlin இந்த நடிகைக்கு ஏன் ஓய +பாது காப்பு வழங்க பட்டு உளது ? மக்களின் வரி பணம் வீணாக ஏன் இந்த நடிகைக்கு ? அப்படி இந்த நாட்டுக்காக அவர் என்ன செய்து விட்டார் ?
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
16 செப், 2020 - 07:55 Report Abuse
M.Sam எதையோ அடிபனே அப்புறம் எதையோ சுமப்பனே என்பது உனக்கு பொருந்தும்
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
16 செப், 2020 - 05:49 Report Abuse
 Muruga Vel அம்மணிக்கு அழகும் அதிகம் ..தைரியமும் அதிகம் ..சிவசேனா போன்ற கட்சியின் தலைவர்களை அவர்கள் வழியிலேயே எதிர் கொள்ள அரசியல் தலைவர்களே அஞ்சுவார்கள் ...சஞ்சய் ராவுட் போன்ற தலைவர்களை டயப்பர் கட்டும் அளவுக்கு அடக்கி வைத்தார் ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in