கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! | சூரி நடிக்கும் கருடன் பட அப்டேட்! | நாகார்ஜூனா படத்தில் இணைந்த இரண்டு இளம் நாயகிகள்! | பொங்கலுக்கு வெளியாகிறது ‛லால் சலாம்' | நியூயார்க்கில் சைக்கிள் ரைடு சென்ற திரிஷா! | விஜய் 68வது பட பாடலுக்கு நடனம் அமைக்கும் ராஜூசுந்தரம்! |
கன்னட சினிமாவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, இவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்கள் வீரேன் கண்ணா, பிரசாந்த் ரங்கா, வைபவ் ஜெயின், நயாஸ், லோயம் பெப்பர் சம்பா, ஆதித்யா அகர்வால், பிரதிக் ஷெட்டி ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 9 பேரை போலீசார் தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ராகிணி உள்பட 9 பேரின் போலீஸ் காவல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதனால் நேற்று பெங்களூரு 1வது கூடுதல் மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகை ராகிணி திவேதி, பிரசாந்த் ரங்கா உள்ளிட்ட 8 பேரும் காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
போலீசார் மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுமதி கோராததால் நடிகை ராகிணி திவேதி உள்பட 5 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகிணி சிறையில் அடைக்கப்பட்டார்.