Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'நோஞ்சான்' தயாரிப்பாளர்கள் - எதிர்ப்புக்கு பாரதிராஜா பதில்

14 செப், 2020 - 20:30 IST
எழுத்தின் அளவு:
Bharathiraja-replied-to-producers

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து புதிதாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்று உருவாகி உள்ளது. இதற்கு பாரதிராஜா தலைவர். இந்த சங்கத்தின் அலுவலக திறப்பு இன்று(செப்., 14) சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வின்போது செய்தியாளர்களை சந்தித்த பாரதிராஜா, ''எங்களிடம் இருக்கும் 100 தயாரிப்பாளர்கள் வலுவானவர்கள் மற்றவர்கள் நோஞ்சான்கள்'' என்கிற தொணியில் பேசினார்.

இது பிற தயாரிப்பாளர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. பல தயாரிப்பாளர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்த ஆடியோ குரல்கள் வெளியாகி உள்ளன. அதில், தயாரிப்பாளர்களின் மனதை புண்படும்படி பேசிய பாரதிராஜா தன் பேச்சை வாபஸ் பெற வேண்டும். பாரதிராஜா தன் சுயநலத்துக்காக வாயிக்கு வந்ததை பேசுகிறார். தயாரிப்பாளர்கள் என்று சொல்லிக்கொண்டு கட்டப்பஞ்சாத்து செய்யும் ஒரு சிலர் பேச்சைக் கேட்டு இப்படி அநாகரிகமாக பேசுவது சரியல்ல. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

தவறாக புரிந்து கொள்ளப்பட்டது - பாரதிராஜா

இந்நிலையில் இந்த விவகாரம் பாரதிராஜாவின் காதுகளுக்கு எட்ட டுவிட்டரில், ''என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே, இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்"என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் விதமாக பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். திரைத் துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து , ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையை கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதை காயப்படுத்தும் விதமாக பேசவெண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் புழக்கம் : கீர்த்தி சுரேஷின் தந்தை பகீர் தகவல்மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் ... சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் சூர்யா மீது நடவடிக்கை வேண்டாம்: 6 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
16 செப், 2020 - 05:48 Report Abuse
meenakshisundaram ஆஹா இது நல்லா இருக்கே - நோஞ்சான் பெயர் .இதை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமின்றி திரை உலக வல்லுநர்கள் எல்லோருக்குமே கொடுக்கலாம் .
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
15 செப், 2020 - 09:45 Report Abuse
Aarkay மன்னிப்பு கேட்கமாட்டாராம் சுற்றி வளைத்து சப்பைக்கட்டு கட்டுவாராம்
Rate this:
14 செப், 2020 - 21:32 Report Abuse
ilaiyaraja muthu என்னங்க பண்றது..... சில நோஞ்சான்கள் புதுசா சங்கம் ஆரம்பிப்பாங்க சன் டிவி காரனுக்கு ஆதரவா அப்படி னு சொன்னா கேக்குறாங்க ளா....... நீங்க தவறா புரிஞ்சுக்காதீங்க நோஞ்சான் ராசா சாரி பாரதிராசா....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in