Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள சினிமாவிலும் போதைப்பொருள் புழக்கம் : கீர்த்தி சுரேஷின் தந்தை பகீர் தகவல்

14 செப், 2020 - 20:13 IST
எழுத்தின் அளவு:
Drugs-happen-in-Malayalam-industry-also--says-Keerthy-father

கடந்த சில நாட்களாக பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கூறி ரியா சக்ரபோர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல பிரபலங்கள் இதில் சிக்குவார்கள் என தெரிகிறது. இந்தநிலையில் மலையாள திரையுலகிலும் கூட போதைப்பொருள் பயன்பாடு இருக்கிறது என பகீர் தகவலை கூறியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ்குமார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “மலையாள திரையுலகிலும் போதை பொருட்கள் புழக்கம் இருக்கத்தான் செய்கிறது. படப்பிடிப்பு சமயங்களில் சில புரடக்சன் பையன்களே எங்களிடம் வந்து, “சார், கேரவனுக்குள்ளேயே நுழைய முடியவில்லை.. அந்த அளவுக்கு வாடை அடிக்கிறது” என அடிக்கடி கூறிய நிகழ்வுகளும் உண்டு. அவர்கள் இனார்தான் என குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. கர்நாடகாவை போல முன்பு இங்கும் பார்ட்டி கலாச்சாரம் ஆரம்பித்தது.. ஆனால் ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டி எச்சரிக்கை விடுத்த பின்பு, அதுபோன்ற புகார்கள் எங்களிடம் வருவதில்லை.. ஆனாலும் போதை கலாச்சாரம் இப்போதும் உள்ளது” என கூறியுள்ளார்.

கடந்த 2014ல் துல்கர் சல்மான் பட கதாசிரியரான ஹஷீர் முஹம்மது என்பவர் போதைப்பொருளை உட்கொண்டு, பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோவும் கூட இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுதலையானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கடலுக்கு அடியில் காதல் போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகைகடலுக்கு அடியில் காதல் போட்டோஷூட் ... 'நோஞ்சான்' தயாரிப்பாளர்கள் - எதிர்ப்புக்கு பாரதிராஜா பதில் 'நோஞ்சான்' தயாரிப்பாளர்கள் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
16 செப், 2020 - 04:42 Report Abuse
J.V. Iyer அதிகாரம், புகழ், பணம் இருக்கும் இடத்தில் இவைகள் வராமல், இல்லாமல் இருந்தால்தான் வியப்பு. இதில் ஒருசிலர்தான் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். தல அஜித் போல. புகழ், பணம் எல்லாம் தலைக்கு ஏறாமல் இருக்கும் ஒரே ஹீரோ தல அஜித்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15 செப், 2020 - 20:36 Report Abuse
skv srinivasankrishnaveni கேரளாலே சாராயம் என்பது குயாதண்ணீர் போல 89% குடிகாரணுக்களேதான் இதுலே போதைக்கும்+பாயிண்டா சூப்பர் தன்னைமரதிருக்கும் குடிகாராலும் போதையேகதி என கிடப்பவர்களும் இந்தியாலே பல இடம்களிலேயும் இருக்காங்க என்பது 100% உண்மை
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
15 செப், 2020 - 13:02 Report Abuse
 Muruga Vel மது அருந்துவதற்கும் போதைப்பொருள் உபயோகிப்பதற்கும் என்ன வேறுபாடு ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in