Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டரும் நானும்...! - சென்றாயன்

14 செப், 2020 - 19:55 IST
எழுத்தின் அளவு:
Actor-Sendrayan-about-his-theatre-experience

தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் நடிகர் ஆனவர் செண்ட்ராயன். மூடர் கூடம் உட்பட பல படங்களில் காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 6 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தன் வாழ்க்கையில் தியேட்டர்களில் கிடைத்த அனுபவம் பற்றி பேட்டியொன்றில் மனம் திறந்துள்ளார் சென்றாயன்.

அதில், “கொரோனாவால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்த்து ரசிப்பதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன். தியேட்டர்களை பற்றி பேசாமல் ஒரு வாழ்க்கையை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எனது இளம் வயதில் எங்கள் ஊரில் உள்ள தியேட்டர் ஒன்றில் சமோசா விற்றிருக்கிறேன். பணத்திற்காக அல்ல.. ஒரு படத்தைப் பலமுறை பார்க்கலாமே என்ற எண்ணத்தில் அந்த வேலையை பார்த்தேன்.

பொல்லாதவன் படத்தில் நடித்த போது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதால், பொல்லாதவன் முதல் நாள் முதல் காட்சிக்கு 200 டிக்கெட்டுகள் வாங்கினார். ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக திடீரென அவர் ஆந்திரா புறப்பட்டு செல்ல வேண்டியதாகி விட்டது.

எனவே, அந்த 200 டிக்கெட்டுகளையும் என்னிடம் கொடுத்து, உன் நண்பர்களை அழைத்துச் செல் எனக் கூறி விட்டார். அப்பொழுது எனக்கு பணக்கஷ்டம். அதனால் அந்த டிக்கெட்டுகளை பிளாக்கில் விற்க முடிவு செய்தேன். நான் நடித்த பட டிக்கெட்டுகளையே காசி தியேட்டர் வாசலில் நின்று பிளாக்கில் விற்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.

நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அவர் தான் என் மனைவி. காதலித்தபோது எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவரை சமாதானம் செய்ய சிங்கம் 2 படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். படம் முடிவதற்குள் அவரின் கோபம் தீர்ந்துவிட்டது. அதன் பிறகு நான் அவரை திருமணம் செய்து கொண்டேன்” என இவ்வாறு சென்ராயன் கூறியுள்ளார்.

மேலும், “தியேட்டர்கள் திறந்த முதல் நாளே நான் சென்று படம் பார்ப்பேன். வைரஸை பற்றி எனக்கு கவலை இல்லை. தியேட்டர் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுந்தர்.சி தயாரிக்கும் புதிய காமெடி படம்சுந்தர்.சி தயாரிக்கும் புதிய காமெடி ... கடலுக்கு அடியில் காதல் போட்டோஷூட் நடத்திய பிரபல நடிகை கடலுக்கு அடியில் காதல் போட்டோஷூட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in