Advertisement

சிறப்புச்செய்திகள்

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போவது இவரா? | ஒன்றாக எதிர்த்து போராடுவோம் - ரகுல் பிரீத் சிங் | சரியான நேரத்தில் உதவி செய்து 30 உயிர்களை காப்பாற்றிய சோனு சூட் | இரண்டாவது அலையை தியேட்டர்கள் சமாளிக்குமா ? | சிவகார்த்திகேயன் படங்களின் நடித்த காமெடி நடிகர் பவுன்ராஜ் மரணம் | கொரோனாவை சமாளிக்க ஆண்ட்ரியாவின் 10 ஆலோசனைகள் | 40 வருட தெலுங்குப் பயணத்தை நினைவு கூர்ந்த ராதிகா | கொரோனா மருத்துவமனைக்கு நிதி சேர்க்கும் 'வலிமை' நாயகி | பெப்சி தொழிலாளர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி | ஊரடங்கில் நடக்கும் படப்பிடிப்புகளை தடுத்து நிறுத்துங்கள்: முதல்வருக்கு சாந்தினி கோரிக்கை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : சிக்க வைக்கப்பட்டாரா பாரதிராஜா

14 செப், 2020 - 19:34 IST
எழுத்தின் அளவு:
Did-Bharathiraja-was-trapped-in-New-producer-council

தமிழ் திரையுலகில் முக்கியமானது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். ஆனால் சமீபமாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. விஷால் தலைமையிலான நிர்வாகம் சரியில்லை என்று கூறி அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்து, கோர்ட் வரை சென்றது. பின் இந்த சங்கத்திற்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. விரைவில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் கொரோனா பிரச்னையால் அதுவும் தடைப்பட்டது.

இந்நிலையில் திடீரென பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பாரதிராஜா தலைவராகவும், பொதுச் செயலாளராக டி.சிவா, பொருளாளராக டிஜி.தியாகராஜன் ஆகியோர் தேர்வாகினர். இந்த சங்கத்திற்கு ஏற்கனவே தாய் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று(செப்., 14) புதிய சங்கத்திற்கான திறப்பு விழா நடந்தது. பாரதிராஜாவின் சொந்த கட்டடத்திலேயே இந்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

பழைய நிர்வாகத்தினர் மீது குற்றச்சாட்டுகளை கூறியதோடு, தனி அதிகாரி நியமனம், விரைவில் சங்க தேர்தல் என்று தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய வேண்டி களத்தில் இறங்கி முழுவீச்சில் செயல்பட்ட பாரதிராஜா, இப்போது தாய் சங்கத்தை உடைக்கும்படியாக செயல்பட்டு, திடீரென புதிய சங்கம் தொடங்கி இருப்பதன் பின்னனியில் பாரதிராஜா, சிலரால் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாக அவருடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்தவர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது : பாரதிராஜா சிறந்த படைப்பாளி, சூதுவாது தெரியாதவர். ஆனால் அவரை முன்னிறுத்தி அவருக்கு பின்னால் இயங்குபவர்கள் சிலர் சில பல திரைமறைவு வேலைகளை செய்கின்றனர். இந்த விஷயம் பாரதிராஜாவுக்கு தெரியாது. எப்போது வேண்டுமானாலும் அவரது பெயர் களங்கப்படுத்தப்படலாம். புதிய சங்கத்தில் இருக்கும் சிலர் பல கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். அதை சரிகட்ட, புது சங்கம் தொடங்கி பாரதிராஜாவை பலிகடா ஆக்க முயல்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா தொடங்கி இப்போதுள்ள அரசியல் கட்சியனர் வரை அனைவருடனும் பாரதிராஜாவுக்கு நல்ல நட்பு இருக்கிறது. தனக்கு இருக்கும் அனுபவத்திற்கு சங்கத்திற்கு தன்னால் ஏதேனும் நல்ல விஷயங்கள் செய்ய முடியும் என எல்லா தரப்பு அரசுடனும் பழகியவர். அதை வைத்து இவர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது. தாய் கழகத்தில் இருந்தபோதே அவருக்கு பொறுப்பு தந்தனர். அப்போதே அவர் பல பிரச்னைகளை சரி செய்திருக்கலாம். ஆனால் இப்போது சிலரது பேச்சை கேட்டு புதிய சங்கம் விஷயத்தில் சற்று அவசரப்பட்டு விட்டார் என்றே தோன்றுகிறது. பாரதிராஜாவிற்கு அடுத்தடுத்து படப்பிடிப்பு உள்ளது. விரைவில் அதில் பங்கேற்க சென்றுவிடுவார். அந்த சமயத்தில் எப்படி இவரால் சங்கத்தை முழுமையாக நிர்வகிக்க முடியும். இவரது பெயரை பயன்படுத்தி இவருக்கு அவப்பெயர் எதுவும் பெற்று தந்துவிடுவார்களோ என பயம் உள்ளது. இதை அவரிடம் நாங்கள் எப்படி சொல்வது, யாரை வைத்து புரிய வைப்பது என்றும் தெரியவில்லை என்றனர்.

ஒற்றுமையே வலிமை என்பார்கள். ஆனால் தமிழ் திரையுலகில் அது இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஒரு சேர அமர்ந்து பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். முறைகேடு இல்லாத அனைத்து தயாரிப்பாளர்களும் வாழ நல்லதொரு அமைப்பாக இருக்க வேண்டும் என்பதே திரையுலகினரின் விருப்பம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்விபேனர் கட்டும் ரசிகர் இறந்தால் ... சுந்தர்.சி தயாரிக்கும் புதிய காமெடி படம் சுந்தர்.சி தயாரிக்கும் புதிய காமெடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in