Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேனர் கட்டும் ரசிகர் இறந்தால் சினிமாவை தடை செய்யலாமா? - சூர்யாவுக்கு காயத்ரி கேள்வி

14 செப், 2020 - 18:11 IST
எழுத்தின் அளவு:
Neet-issue-:-Gayathiri-Raghuram-replied-to-Suriya

சென்னை : நீட் தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அவருக்கு நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் எழுப்பி கேள்வி வைரலாகி உள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று(செப்., 13) நாடு முழுவதும் நடந்து முடிந்தது. இந்த தேர்வுக்கு பயந்து தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதை சுட்டிக்காட்டியும், ஏற்கனவே தமிழகத்தில் உள்ள நீட் எதிர்ப்பையும் சுட்டிக்காட்டி இருதினங்களாக சமூகவலைதளங்கள் உள்ளிட்டவைகளில் பெரும் விவாதம் நடக்கிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‛நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ‛கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தேர்வுக்கு வாழ்த்து சொல்ல வேண்டி நாம் இப்போது ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது என தெரிவித்தார்.

சூர்யாவின் இந்த அறிக்கையை அவரது ரசிகர்களும், நீட்டை எதிர்க்கும் அரசியல் கட்சியினரும் வைரலாக்கினர். அதேசமயம் நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்டதாக சூர்யா மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமென்று கோரி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதினார். இதனால் சமூகவலைதளங்களில் சூர்யாவிற்கு ஆதரவாக டிரண்ட் செய்து வந்தனர். அதேசமயம் நீட் தேர்வின் நன்மை பற்றியும் பலர் எடுத்துரைத்தனர்.

இந்நிலையில் நடிகையும், பா.ஜ.வை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் டுவிட்டரில் சூர்யாவின் அறிக்கையை சுட்டிக்காட்டி, நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல்நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்காக பேனர் வைக்கிறார்கள். சமயத்தில் அப்படி வைக்கும்போது தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். இதற்காக சினிமாவையே தடை செய்து விடலாமா. தயவு செய்து மாணவர்களை தைரியமாக தேர்வை எதிர்கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதுவும் ஒரு வித பரீட்சை தான் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (22) கருத்தைப் பதிவு செய்ய
வசூல் குறைந்த 'டெனட்' - மற்ற வெளியீடுகள் தள்ளி வைப்புவசூல் குறைந்த 'டெனட்' - மற்ற ... புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : சிக்க வைக்கப்பட்டாரா பாரதிராஜா புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் : சிக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (22)

Tamilnesan - Muscat,ஓமன்
15 செப், 2020 - 19:21 Report Abuse
Tamilnesan இன்று உலக புகழ் பெற்ற பாரத ரத்னா மோக்ஷ குண்டம் சர். விஸ்வேஸ்வரய்யா அவர்களின் பிறந்த தினம். இதை இன்ஜினீர்கள் தினமாக இந்தியா, ஸ்ரீலங்கா மற்றும் தன்சானியா நாடுகள் கொண்டாடுகின்றன. இவர் நூற்றிரெண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தவர். இவரை பற்றி எந்த தமிழ் செய்தித்தாளில் செய்தி வரவில்லை. ஒருக்கால், இவர் தமிழ் சினிமாவில் நடித்திருந்தால் இவரை பற்றி செய்தி வந்திருக்கும். இது தான், தமிழ்நாட்டின் லட்சணம்.
Rate this:
Tamilnesan - Muscat,ஓமன்
15 செப், 2020 - 12:27 Report Abuse
Tamilnesan யாரை எங்கு வைக்க வேண்டுமோ, அது செய்யாததின் விளைவு இது. காலுக்கு செருப்பு முக்கியம், ஆனால் வீட்டு வாசல் வரைதான் செருப்பை அணித்திருப்போம். தலையில் தூக்கி வைத்து கொள்ள மாட்டோம். அது போல, சினிமா முக்கியம்தான், அதற்காக சினிமாக்காரர்களை தலையில் தூக்கி வைத்து கொள்ள கூடாது.
Rate this:
Valavan - Chennai,இந்தியா
15 செப், 2020 - 11:18 Report Abuse
Valavan அம்மா நீங்க உண்மையிலேயே பிஜேபி லீடருக்கான தகுதி உள்ளவர். பேனர் வைப்பதை தடை செய்ய சட்டம் இருக்கு, உண்மையில் பின்பற்றினாலே போதும்.
Rate this:
ram, nigeria - Lagos,நைஜீரியா
15 செப், 2020 - 09:44 Report Abuse
ram, nigeria நீட்டுக்கு முன்பும்,பின்பும்.. ஒரு ஒப்பீடு.. கவனமாக படியுங்கள்.. ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் மொத்த இடம் 150. அதில் 15% ALL INDIA RANK கோட்டாவுக்கு போய் விடும். மீதம் 150-23=127 சீட்.இந்த 127 சீட்டில் 50% (64:64) தமிழ்நாடு அரசு சட்டதிட்டங்களுக்குட்பட்டு சுமார் 64 சீட் ஒதுக்கப்படும். மீதம் 64 சீட் MANAGEMENT கோட்டா. அதை அவர்கள் வைக்கும் தேர்வின் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஒதுக்கிக் கொள்ளலாம். 64 சீட்டையும் நன்கொடை சுமார் 50 லிருந்து 1 கோடி வரை கொடுக்கப்படும் பெரும்பாலும் பிற மாநில பணக்கார மாணவர்களுக்கே கொடுக்கப்பட்டு வந்துள்ளது,தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டு,(கோவை மாணவி ₹40 லட்சம் நன்கொடை கொடுத்து fees கட்ட முடியாமல் வெளியேறியதை கவனத்தில் கொள்ளவும்). இது NEET க்கு முன்பு இருந்த நிலை. NEET க்குப் பிறகு : 2017 NEET ஐ உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் போலவே தமிழ்நாட்டு மாணவர்களுக்கும் NEET கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கிய பிறகு, 150 சீட்டில் 23 (15%) ALL INDIA RANK க்கு போக மீதமுள்ள அனைத்து சீட்டுகளும், 127 சீட்டுகளையும் NEET RANK படியும், அதிலும் 69% இட ஒதுக்கீட்டின்படியும் நிரப்ப வேண்டும் என்பது நடைமுறை படுத்தப்பட்டு விட்டது. அதாவது NEET க்கு முன்பு நன்கொடை வாங்கி ஒதுக்கிய 64 இடங்களையும் சேர்த்து 127 சீட்டுகளையுமே 2017 உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் படித்து NEET எழுதி தகுதி மார்க் பெற்ற தமிழக SC,ST,MBC,BC போன்றவர்களுக்கு 69% இடஒதுக்கீட்டின்படி (88 சீட்)யும்,மீதி 40 சீட்டுகளை OC களுக்கும் ஒதுக்கப்பட்டு ஒரு பைசா நன்கொடையின்றி வழங்கப்பட்டுள்ளது. இந்த OC ஒதுக்கீட்டிலும் SC,ST,MBC,BC மாணவர்களுக்கும் இடம் உண்டு. மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது. வேண்டுமானாலும் தனியார் கல்லூரிகள், சீட் விபரத்தை கூகுளில் போய் பார்த்து கணக்கிட்டுக் கொள்ளுங்கள்,அப்பத் தெரியும் தனியார் மருத்துவ கல்லூரி டிவிக்காரன் வால் வால் வ்வீல் வீல் என்று ஏன் கத்துகிறான் என்று?? கணக்கு போட்டு விட்டுச் சொல்லுங்க NEET வேண்டுமா? வேண்டாமா? என்று
Rate this:
15 செப், 2020 - 09:17 Report Abuse
விஜய் சூர்யா படிக்க வைக்கிறார். அதனால படிப்பு சம்பந்தமாக பேசுகிறார். பாப்பா உனக்கும் படிப்புக்கும் அல்லது சினிமாவுக்குமே இப்ப சம்பந்தம் இல்ல. நீ சொல்ல வேண்டியது என்னன்னா.... குடிகாரி செத்தா சாராயக்கடைய மூடிரலாமான்னு தான்... பிஜேபியின் அருமையான கண்டுபிடிப்பு... இந்த லட்சணத்துல தமிழ்நாட்டுல பிஜேபிக்கு எவண் ஓட்டுப்போடுவான்.....?
Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in