Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 ஆயிரம் வீடியோக்கள், 85 லட்சம் நிதி: சத்தமின்றி சாதனை படைத்த சின்மயி

14 செப், 2020 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Chinmayi-raise-Rs.85-lakhs-fund-during-covid

பாடகி சின்மயி கொரோனா ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடுகிறவர்களுக்காக புதுமையான முறையில் நிதி திரட்டினார். இணையதளத்தில் தொடர்பு கொண்டு பிடித்தமான பாடலை பாடச் சொன்னால் பாடுவார். அதற்கு ஈடாக கிடைக்கும் பணத்தை வறுமையில் வாடும் குடும்பத்திற்கு உதவுவார்.

இந்த சமூக பணியின் மூலம் அவர் இதுவரை 3 ஆயிரம் பாடல்களை பாடி வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். இதன் மூலம் 85 லட்சம் நிதி திரட்டப்பட்டு ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் வேலையின்றி பணத்துக்காக கஷ்டப்படுகிறவர்களுக்கு வழங்குவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 3000 வீடியோக்கள் அனுப்பப்பட்டுள்ளன. உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களிடமிருந்து 85 லட்சத்தை திரட்டி, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டது.

ஊரடங்கு முடிவடைந்த போதிலும், அடிப்படைத் தேவைகள், கல்வி கட்டணங்கள், மருத்துவ செலவுகள் போன்றவற்றிற்காக பணம் செலுத்த முடியாமலும் பலர் துன்ப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ இந்த முயற்சியை தொடர்ந்து செய்ய இருக்கிறேன். என்கிறார்.

Advertisement
கருத்துகள் (34) கருத்தைப் பதிவு செய்ய
கோவாவில் ஓய்வெடுக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிகோவாவில் ஓய்வெடுக்கும் நயன்தாரா, ... அசுரன் தீஜெய் ஹீரோ ஆனார் அசுரன் தீஜெய் ஹீரோ ஆனார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (34)

rcsn - Chennai,இந்தியா
20 செப், 2020 - 08:23 Report Abuse
rcsn ஹாய் சின்மயி, ஆசார்யன், தாயார் பெருமாள் அனுக்கிரஹம் எப்போதும் உனக்கு உண்டு. வாழ்த்துக்கள். ரொம்ப பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நாம் என்ன செய்கிறோமோ அது தான் நமக்கு பல மடங்காக பெருகி வரும். இது கண்கூடாக கண்ட அனுபவம். எனவே தொடர்ந்து நல்லதையே செய்வோம் எப்போதும் போல.
Rate this:
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17 செப், 2020 - 13:26 Report Abuse
Ramesh Sargam நல்ல முயற்சி. நல்ல செயல். வாழ்க நீடூழி.
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
16 செப், 2020 - 19:38 Report Abuse
RaajaRaja Cholan தைரியாமான பெண்மணி , சமூக அக்கறை கொண்ட பெண் , வாழ்த்துக்கள் சின்மயீ , ஓங்குக உங்கள் தைரியம் மிகுந்த தொண்டு
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
16 செப், 2020 - 18:53 Report Abuse
S. Narayanan நல்லதை எல்லோராலும் செய்ய முடியாது. ஒரு சிலரே செய்வர் என்பதற்கு இந்த சகோதரியின் முயற்சி ஒரு எடுத்துக்காட்டு. வாழ்க நலமுடன்.
Rate this:
Nisha Rathi - madurai,இந்தியா
16 செப், 2020 - 18:42 Report Abuse
Nisha Rathi சின்மயி அவர்களே உங்களுடைய சேவை பாராட்டுதலுக்கு உரியது நீங்கள் செய்த காரியம் நிச்சயம் யாராலும் செய்ய முடியாது
Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in